பிரெஞ்ச் ஒபன் பட்டம் வென்று 4 கிராண்ட் ஸ்லாம்களையும் வென்ற 8-வது வீரராகும் சாதனைக் கனவுடன் களமிறங்கிய செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், சுவிஸ் வீரர் வாவ்ரிங்காவிடம் 4-6, 6-4, 6-3, 6-4 என்ற செட்கணக்கில் தோல்வி தழுவ, வாவ்ரிங்கா முதல்முறையாக பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் பட்டம் வென்றார்.
மேலும் 30 வயதில் பிரெஞ்ச் ஓபன் வென்ற வகையில் அதிக வயதில் பிரெஞ்ச் ஓபன் வென்ற வீரரானார் வாவ்ரிங்கா.
அனைத்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்ற உயர்மட்ட டென்னிஸ் நட்சத்திரங்கள் பட்டியலில் இணையும் கனவுடன் களமிறங்கிய ஜோகோவிச் 4 ஆண்டுகளில் பிரெஞ்ச் ஓபன் இறுதியில் 3-வது முறையாக தோல்வி அடைந்துள்ளார்.
முதல் செட்டில் அபாரமாக ஆடிய ஜோகோவிச், வாவ்ரிங்கா இரண்டு பிரேக் பாயிண்ட்களைக் காப்பற்றிக்கொள்ள கடைசியாக வாவ்ரிங்காவின் சர்வ் ஒன்றை முறியடித்து 4-3 என்று முன்னிலை பெற்றார் ஜோகோவிச். தவறு வாவ்ரிங்காவினுடையது, ஏனெனில் தன் சர்வில் 2 டபுள் ஃபால்ட்களை செய்ய ஜோகோவிச் அந்த சர்வை முறியடித்தார்.
இரண்டாவது செட்டில் வாவ்ரிங்காவின் ஃபோர்ஹேண்ட் ஷாட்கள் நன்றாக அமைந்தன, இருந்த போதிலும் 4வது கேமில் ஜோகோவிச் சர்வை முறியடிக்க கிடத்த வாய்ப்பை வாவ்ரிங்கா கோட்டை விட்டார். பிறகு 6-வது கேமிலும் ஒரு பிரேக் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் வாவ்ரிங்கா அதனையும் நழுவ விட்டார்.
8-வது கேமில் மீண்டும் ஒரு பிரேக் வாய்ப்ப்பு பறிபோக கோபமடைந்த வாவ்ரிங்கா தனது ராக்கெட்டை தரையில் ஓங்கி அடித்து வெறுப்பை காண்பித்தார். ஆனாலும் ஜோகோவிச்சின் பேக்ஹேண்ட் ஷாட் ஒன்று சரியாக அமையாமல் 2-வது செட்டைக் கைப்பற்றினார் வாவ்ரிங்கா.
3-வது செட்டில் தனது சர்வை இழந்த ஜோகோவிச் 2-4 என்று பின்தங்கினார். அதன் பிறகு ஜோகோவிச், வாவ்ரிங்கா சர்வை பிரேக் செய்தார், அதாவது முதல் செட்டின் 7-வது கேமுக்குப் பிறகு 3-வது செட்டில் பிரேக் செய்தார். ஆனால் அதன் பிறகு வாவ்ரிங்கா ஆடிய ஆக்ரோஷமான பேக் ஹேண்ட் ஷாட்கள், துல்லியமான ஃபோர்ஹேண்ட் ஷாட்கள் ஆகியவை முன்னால் ஜோகோவிச் சரணடைந்தார்.
4-வது செட்டில் ஜோகோவிச் 3-0 என்று முன்னிலை பெற்றிருந்தார். ஆனால் விட்டுக் கொடுக்காத வாவ்ரிங்கா 30 ஸ்ட்ரோக் ராலியில் பிரேக்கிலிருந்து தனது சர்வை மீட்டார், பிறகு ஜோகோவிச் 2 பிரேக் பாயிண்ட் வாய்ப்புகளை காப்பாற்றிக் கொண்டார். இதனால் 4-3 என்று தொடர் முன்னிலை வகித்தார்.
8-வது கேமில் வாவ்ரிங்கா அளித்த 3 பிரேக் பாயிண்ட் வாய்ப்புகளை ஜோகோவிச் வின்னராக மாற்ற முடியவில்லை. மாறாக அபாரமான பேக்ஹேண்ட் ஷாட்களில் வாவ்ரிங்கா 5-4 என்று முன்னிலை பெற்றார். பிறகு மீண்டும் அதே பேக்ஹேண்ட் அபார ஷாட் ஒன்றுதான் பட்டத்தையும் பெற்றுத்தந்தது.
ஜோகோவிச் 3 நாட்கள் தொடர்ச்சியாக ஆட வேண்டிய நிலை ஏற்பட்டதோடு, அரையிறுதியில் முர்ரேயுடன் 5 செட் போட்டி ஒன்றையும் ஆட வேண்டிய நிலை ஏற்பட்டதால் மிகவும் களைப்புடன் காணப்பட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago