கனடாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ், இங்கிலாந்து, கொலம்பியா, தென் கொரியா ஆகிய 4 அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதில் கொலம்பியா மட்டும் 3-வது இடத்தைப் பிடித்த சிறந்த அணிகளின் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
ஒட்டாவாவில் நடந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 5-0 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவை வீழ்த்தியது. இதன்மூலம் 6 புள்ளிகளுடன் எப் பிரிவில் முதலிடத்தைப் பிடித்த பிரான்ஸ் அடுத்த சுற்றை உறுதி செய்தது.
மான்ட்ரியாலில் நடந்த மற்றொரு எப் பிரிவு லீக் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்திய இங்கிலாந்து அணி 6 புள்ளிகளைப் பெற்றது. கோல் வித்தியாச அடிப்படையில் 2-வது இடத்தைப் பிடித்த அந்த அணி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றது.
இ பிரிவு லீக் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை தோற்கடித்த தென் கொரிய அணியும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நாக் அவுட் சுற்றுக்கு முதல்முறையாக முன்னேறியிருக்கும் தென் கொரியா, அதில் பிரான்ஸை சந்திக்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago