பிரெஞ்சு ஓபனில் களமிறங்குகிறார் ஃபெடரர்

By செய்திப்பிரிவு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் களமிறங்குவார் என அவருடைய மேலாளர் டோனி காட்சிக் தெரிவித்துள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 25-ம்தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தொடங்குகிறது. 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான ரோஜர் ஃபெடரர் மனைவி மிர்காவுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்ததால் மாட்ரிட் ஓபனில் இருந்து ஃபெடரர் விலகினார். மேலும் சில நாள்கள் தனது மனைவியுடன் நேரத்தை செலவிடவிருப்பதாக அவர் கூறியிருந்தார்.

பிரெஞ்சு ஓபன் தொடங்க இன்னும் 15 நாள்களே உள்ளதால் ஃபெடரர் பங்கேற்பாரா, மாட்டாரா என்ற சந்தேகம் நிலவிய நிலையில், அவர் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக அவருடைய மேலாளர் காட்சிக் மேலும் கூறி

யிருப்பதாவது: பிரெஞ்சு ஓபனில் ஃபெடரர் களமிறங்குகிறார். அதேநேரத்தில் அடுத்த வாரம் தொடங்கவுள்ள ரோம் ஓபனில் களமிறங்குவது குறித்து குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கடைசி நேரத்தில் ஃபெடரர் முடிவெடுப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.

32 வயதாகும் ஃபெடரர் இதுவரை 57 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடியுள்ளார். பிரெஞ்சு ஓபனில் தொடர்ந்து 16-வது முறையாக களமிறங்குகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்