பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் அக்னீஸ்கா அதிர்ச்சி தோல்வி

By செய்திப்பிரிவு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றில் போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா அதிர்ச்சி தோல்வி கண்டுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 3-வது சுற்றில் அக்னீஸ்கா 4-6, 4-6 என்ற நேர் செட்களில் குரேஷியாவின் அஜ்லா டாம்ஜானோவிச்சிடம் தோல்வி கண்டார்.

இதன்மூலம் மகளிர் ஒற்றையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் முதல் 3 இடங்களில் இருந்த மூன்று வீராங்கனைகளும் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். முன்னதாக 2-ம் நிலை வீராங்கனையான லீ நா முதல் சுற்றோடும், முதல் நிலை வீராங் கனையான செரீனா 2-வது சுற்றோடும் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

போபண்ணா ஜோடி முன்னேற்றம்

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-ஸ்லோவேகி யாவின் கேத்தரினா ஸ்ரீபோட்னிக் ஜோடி 7-6 (5), 7-5 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் மார்க் லோபஸ்-செக். குடியரசின் ஆன்ட்ரியா பெட்கோவிக் ஜோடியைத் தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்