குயெரோ ஹேட்ரிக்: பொலிவியாவை வீழ்த்தி கோப்பா அமெரிக்கா அரையிறுதியில் பெரு

By ஐஏஎன்எஸ்

சிலியில் நடைபெறும் கோப்பா அமெரிக்கா, தென் அமெரிக்க கால்பந்து கோப்பைக்கான தொடரின் காலிறுதியில் பொலிவியா அணியை பெரு அணி 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

பெரு ஸ்ட்ரைக்கர் குயெரோ முதல் பாதியில் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து பிறகு 74-ம் நிமிடத்தில் ஹேட்ரிக் கோலை அடித்தார். ஆட்டம் முடிய 6 நிமிடங்கள் இருக்கும் போது பொலிவியாவின் மார்செலோ மொரீனோ ஆறுதல் கோலை அடித்தார்.

இதனையடுத்து அரையிறுதியில் சிலி அணியை வரும் திங்களன்று சந்திக்கிறது பெரு.

பெரு ஆட்டத்தை தாக்குதல் முறையில் விறுவிறுப்பாகத் தொடங்கியது. குயெரோ அபாரமாக ஆடி கோல் அடிக்க முயல பொலிவிய கோல் கீப்பர் ரூமெல் குவினோனெஸ் தடுத்தார். பிறகு கிளாடியோ பிஸாரோ ஒரு பந்தை கோலுக்கு சற்று தள்ளி அடித்தார்.

இப்படியே போய்க் கொண்டிருந்த ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் பெரு வீரர் யுவான் வார்கஸ் இடது புறத்திலிருந்து ஒரு அபாரமான கிராஸ் செய்ய அதனை தலையால் வலுவாக கோலுக்குள் முட்டித் தள்ளினார் குயெரோ. பெரு 1-0 என்று முன்னிலை வகித்தது.

இந்த கோலுக்கு 2 நிமிடங்கள் கழித்து கிறிஸ்டியன் கியூவாவின் பந்தை எடுத்து கொண்டு அபாரமாக குயெரோ 2-வது கோலை அடித்தார்.

ஹாஃப் டைமுக்கு முன்னதாக பொலிவியாவுக்கு 2 வாய்ப்புகள் கிடைத்தன. அதில் மொரீனோ 25 அடியிலிருந்து அடித்த ஷாட் ஒன்று கோலுக்கு சற்று மேலே சென்றது கோல் விழவில்லை. ஆனால் ஒரு அபாரமான ஷாட் இது. மற்றொரு வாய்ப்பை கோல் கீப்பர் பெட்ரோ கேலீஸ் டைவ் அடித்து தடுத்தார்.

இடைவேளைக்கு முன்னதாக பெரு அணிக்கு மேலும் 2 வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் ஜெஃபர்சன் ஃபரான் இரு முறையும் தவறினார்.

இடைவேளைக்குப் பிறகு வழக்கம் போல் 2 கோல்கள் பின் தங்கிய நிலையில் பொலிவியா கொஞ்சம் நெருக்கியது, மார்டின் ஸ்மெட்பெர்க், அல்சிடெஸ் பீனா ஜோடி சேர கோல் ஷாட் நேராக பெரு கோல் கீப்பர் கேலீஸ் கையில் சென்றது. அதன் பிறகு அலியாண்ட்ரோ சுமாசெரோ தொலைவிலிருந்து அடித்த புல்லட் ஷாட் ஒன்று கோலுக்கு மேலே சென்றது.

ஆட்டத்தின் 74-வது நிமிடத்தில் டேனி பெஜரானோ தனது சக வீரருக்கு அடித்த பாஸை அருமையாக இடையில் புகுந்து எடுத்துச் சென்ற குயெரோ கோலாக மாற்றி ஹேட்ரிக் சாதனை நிகழ்த்தினார்.

ஆட்டம் முடிய 6 நிமிடங்கள் இருக்கும் போது பெரு வீரர் லூயிஸ் அட்வின்குலா, பொலிவிய வீரர் டேமியன் லிசியோவை தள்ளி விட ஸ்பாட் கிக் கொடுக்கப்பட்டது. இதனை மொரீனோ கோலாக அடித்தார். அது ஆறுதல் கோலாகவே அமைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்