பெங்களூரில் ஐபிஎல் இறுதிப் போட்டி

By செய்திப்பிரிவு

ஐபிஎல் இறுதிப் போட்டி பெங்களூரில் வரும் ஜூன் 1-ம் தேதி நடைபெறவுள்ளது. ஐபிஎல் நிர்வாகக் குழு இதனை உறுதி செய்துள்ளது.

மும்பையில் ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சென்னை மற்றும் கொல்கத்தாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகளை வேறு நகரங்களுக்கு மாற்றுதல் மற்றும் இறுதிப் போட்டி நடைபெறும் நகரம் உள்ளிட்டவை குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டன.

இது தொடர்பாக பிசிசிஐ கவுரவச் செயலர் சஞ்சய் பாட்டீல் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஐபிஎல் நிர்வாகக்குழுவின் முடிவின் படி, கொல்கத்தாவில் வரும் 14-ம் தேதி நடைபெறவிருந்த மும்பை-கொல்கத்தா இடையிலான போட்டி, கட்டக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.சென்னையில் 18, 22-ம் தேதிகளில் நடை பெறவிருந்த சென்னை அணியின் போட்டிகள், அந்த அணியின் மாற்று சொந்த மண் அரங்கமாகக் கருதப்படும் ஜார்க்கண்ட் ராஞ்சிக்கு மாற்றப்பட்டுள்ளன.

பிளே ஆப் சுற்று

முதல் குவாலிபையர் போட்டி கொல்கத்தாவில் வரும் 27-ம் தேதி இரவு 8.00 மணிக்கு நடைபெறும். தேவைப்பட்டால் மாற்று நாளான 28-ம் தேதி மாலை 4.00 மணிக்கு போட்டி நடைபெறும். எலிமினேட்டர் போட்டி, வரும் 28-ம் தேதி இரவு 8.00 மணிக்கு மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும். தேவைப்பட்டால் மாற்று நாளான 29-ம் தேதி மாலை 4.00 மணிக்கு நடைபெறும். இரண்டாவது குவாலிபையர் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வரும் 30-ம் தேதி இரவு 8.00 மணிக்கு நடைபெறும். இப்போட்டிக்கு மாற்று நாள் ஒதுக்கப்படவில்லை.

இறுதிப்போட்டி

இறுதிப்போட்டி வரும் ஜூன் முதல் தேதி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் இரவு 8.00 மணிக்கு நடைபெறும். தேவைப்பட்டால் மாற்று நாளான 2-ம் தேதி இரவு 8.00 மணிக்குப் போட்டி நடைபெறும்.

பொல்லார்டு -ஸ்டார்க் மோதல்

இக்கூட்டத்தில் பொல்லார்டும்-ஸ்டார்க்கும் மோதிக் கொண்டது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. அப்போட்டியில் உண்மையான விளையாட்டு மனோபாவத்துடன் இருவரும் செயல்படவில்லை என நிர்வாகிகள் வருத்தம் தெரிவித்தனர். இது போன்ற சம்பவங்கள் இனி நிகழக்கூடாது என அனைத்து அணி நிர்வாகம், அணித்தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்