இஸ்தான்புல் ஓபன் டென்னிஸில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் சாம்பியன் பட்டம் வென்றார்.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஃபெடரர் 6-3, 7-6 (11) என்ற நேர்செட்களில் உருகுவேயின் பாப்லோ கியூ வேஸைத் தோற்கடித்தார்.
17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வரான ஃபெடரர், இஸ்தான்புல் போட்டியில் வென்றதன் மூலம் ஒட்டுமொத்தத்தில் 85-வது சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியி ருக்கிறார்.
ஒரு மணி நேரம் 36 நிமிடங்கள் நடந்த இந்தப் போட்டியில் மணிக் கட்டில் ஏற்பட்ட காயத்துக்காக இரு முறை சிகிச்சை பெற்ற கியூவேஸ், 2-வது செட்டில் கடுமையாகப் போராடினார். இதனால் அந்த செட் டைபிரேக்கர் வரை சென்றது.
டைபிரேக்கரிலும் விடாப்பிடியாக போராடிய கியூவேஸ், 24 கேம்கள் வரை இழுத்துச் சென்றார். ஆனாலும் அவரால் அந்த செட்டை தக்கவைக்க முடியாமல் போனது.
கடைசியாக 2012-ல் களிமண் ஆடுகளத்தில் வென்ற (மாட்ரிட் ஓபன்) ஃபெடரர், அதன்பிறகு இப்போதுதான் களிமண் ஆடுகளத்தில் நடைபெற்ற போட்டியில் வென்றிருக்கிறார்.
அது குறித்துப் பேசிய ஃபெடரர், “நீண்ட நாட்களுக்குப் பிறகு களிமண் ஆடுகளத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப் போட்டி 3-வது செட்டுக்கு தகுதியான போட்டி என நினைக்கிறேன்” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago