பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், செர்பியாவின் அனா இவானோவிச் உள்ளிட்டோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றான 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 3-வது சுற்றில் 2009 சாம்பியனான ஃபெடரர் 6-4, 6-3, 6-2 என்ற நேர் செட்களில் போஸ்னியாவின் டாமிர் தும்ஹரை தோற்கடித்தார்.
இந்தத் தொடரில் இதுவரை ஒரு செட்டைக்கூட இழக்காமல் 4-வது சுற்றுக்கு முன்னேறியிருக்கும் ஃபெடரர், அடுத்ததாக பிரான்ஸின் கேல் மான்பில்ஸ் அல்லது உருகுவேயின் பாப்லோ கியூவாஸை சந்திக்கவுள்ளார்.
மகளிர் ஒற்றையர் 3-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் செர்பியாவின் அனா இவானோவிச் 6-0, 6-3 என்ற நேர் செட்களில் 18 வயது குரேஷிய வீராங்கனையான டோனா வெகிச்சை வீழ்த்தினார். 53 நிமிடங்களில் 3-வது சுற்றை முடிவுக்கு கொண்டு வந்த இவானோவிச், அடுத்ததாக ரஷ்யாவின் எக்டெரினா மகரோவா அல்லது எலினா வெஸ்னினாவை சந்திக்கவுள்ளார்.
போட்டித் தரவரிசையில் 29-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸின் அலைஸ் கார்னெட் 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் குரேஷியாவின் லூசிச் பரோனியை வீழ்த்தினார். இந்த ஆட்டம் இரண்டரை மணி நேரம் நடைபெற்றது.
3-வது சுற்றில் பயஸ் ஜோடி
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-கனடாவின் டேனியல் நெஸ்டர் ஜோடி 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த ஜோடி தங்களின் 2-வது சுற்றில் 7-6 (3), 6-2 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் பெஜிமான்-ஆஸ்திரேலியாவின் ஜுலியன் நோவ்லே ஜோடியைத் தோற்கடித்தது.
சானியா ஜோடி தோல்வி
கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்தியாவின் சானியா மிர்சா-பிரேசிலின் புருனோ சோயர்ஸ் ஜோடி 2-6, 2-6 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் அன்னா லீனா-நெதர்லாந்தின் ஜூலியன் ரோஜர் ஜோடியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago