எதிரணியினரை மதிக்க வேண்டும்: சச்சின் டெண்டுல்கர்

By பிடிஐ

தன் அணியினர் மீது நம்பிக்கை வைப்பதும் எதிரணியினரை மதிப்பதுமே ஒரு நல்ல வீரராக உருவெடுக்க வழிவகுக்கும் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த சிங்கப்பெருமாள் கோயிலில் உள்ள ஜெர்மன் ஆடம்பர கார் பி.எம்.டபிள்யூ தொழிற்சாலைக்கு வருகை தந்த சச்சின் டெண்டுல்கர் செய்தியாளர்களிடம் பேசும் போது இதனை தெரிவித்தார்.

"நாம் விளையாடும் போது அணியாக ஒன்று திரண்டு ஆடுவது மற்றும் சக வீரரை நம்புவது என்பது அவசியம். ஒரு அவசர சிங்கிளுக்கு சக பேட்ஸ்மென் அழைக்கிறார் என்றால் அவரது முடிவை நாம் நம்ப வேண்டும். நாம் பின்னால் திரும்பிப் பார்க்கக் கூடாது. அவர் அழைப்பை நம்பி ஓடவேண்டும். மேலும், எதிரணியினரை மதிப்பதும் மிக முக்கியமானது.

ஆம், நாம் நம்முடன் போட்டியிடுவோரை வெல்ல வேண்டும், ஆனால் இதற்காக ஆட்டத்தின் மதிப்பீடுகளை மறக்க வேண்டாம், அல்லது ஆட்டத்தை தவறான உணர்வு நெறியில் ஆட வேண்டாம். சரியான ஆட்ட உணர்வை நாம் வெளிப்படுத்த வேண்டும். அனைத்திற்கும் மேலாக எதிரணியினரை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்