போர்ச்சுக்கல் ஓபன்: சானியா ஜோடி சாம்பியன்

By செய்திப்பிரிவு

போர்ச்சுக்கல் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

போர்ச்சுகல்லிலின் ஒராஸ் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சானியா-காரா ஜோடி 6-4, 6-3 என்ற நேர் செட்களில் செக்.குடியரசின் இவா ரொடினோவா-வலேரியா சோலோவ்இவா ஜோடியைத் தோற்கடித்தது.

இந்த சீசனில் மூன்று முறை இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய சானியா-காரா ஜோடி, முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறது. முன்னதாக கடந்த மார்ச்சில் நடைபெற்ற இண்டியன்வெல்ஸ் ஓபனிலும், கடந்த வாரம் நடைபெற்ற ஸ்டட்கர்ட் ஓபனிலும் சானியா-காரா ஜோடி இறுதிச்சுற்றில் தோல்வி கண்டது. போர்ச்சுக்கல் ஓபனில் பட்டம் வென்ற சானியா-காரா ஜோடிக்கு ரூ.8 லட்சம் ரொக்கப் பரிசும், 280 ரேங்கிங் புள்ளிகளும் கிடைத்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்