ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின் அறிவித்துள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2001-ம் ஆண்டு ஹோபார்ட்டில் ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான பிராட் ஹேடின், கடைசியாக உலகக் கோப்பை இறுதி வெற்றியுடன் தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்தார். ஆனாலும் அதிகாரபூர்வமாக அவர் இதனை இப்போதுதான் அறிவித்துள்ளார்.
"எனக்கு பெருமை அளிக்கக் கூடிய வகையில் ஒருநாள் கிரிக்கெட் வாழ்வு அமைந்தது, 3 உலகக் கோப்பை அணிகளில் இடம்பெற்றேன். இப்போது இந்த வடிவத்திலிருந்து வெளியேறும் நேரம் வந்துவிட்டது.
உள்நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பை வெற்றியுடன் ஓய்வு பெறும் பெருமை நிறைய வீரர்களுக்குக் கிடைப்பதில்லை. எனக்கு கிடைத்தது அதிர்ஷ்டமே.
ஆஸ்திரேலியா நம்பர் 1 நிலையை எட்டிய பிறகே நான் விடை பெறுகிறேன். நாங்கள் இதுவரை சாதித்தது பற்றி பெருமை அடைகிறேன்" என்று தனது ஓய்வு பற்றி கூறினார் ஹேடின்.
126 ஒருநாள் போட்டிகளை ஆடிய பிராட் ஹேடின், 170 கேட்ச்கள் 11 ஸ்டம்பிங்குகளை செய்துள்ளார். மேலும் 3,122 ரன்களை 31.53 என்ற சராசரியின் கீழ் அவர் எடுத்துள்ளார். 2010-ல் நியூஸிலாந்துக்கு எதிராக 110 ரன்கள் எடுத்தது இவரது அதிகபட்ச ஒருநாள் போட்டி ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது,
முக்கிய செய்திகள்
விளையாட்டு
46 mins ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago