கிரிக்கெட்டின் குரல் என்றழைக்கப்பட்ட பிரபல வர்ணனை யாளரும், முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டனுமான ரிச்சி பெனாட் (84) சிட்னியில் காலமானார்.
உலகம் முழுவதிலுமுள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பிரியமான வர்ணனையாளரான பொனாடின் உயிர் தூக்கத்திலேயே பிரிந்து விட்டதாக அவருடைய குடும்பத் தினர் தெரிவித்துள்ளனர். தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், 2013-ல் கார் விபத்தில் சிக்கிய பிறகு அவருடைய உடல்நிலை மிகமோசமானது.
பெனாடின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அபாட், ‘ஆஸ்திரேலியாவுக்கு சோகமான நாள். கிரிக்கெட் சாம்பியனும், ஆஸ்திரேலியாவின் அடையாளமாகத் திகழ்ந்த வருமான பெனாடை இழந்து விட்டோம். அவருடைய வாழ்க்கை என்னவொரு இன்னிங்ஸ். உங்கள் ஆன்மா அமைதியில் திளைக் கட்டும் பெனாட்’ என்று குறிப்பிட் டுள்ளார். அரசின் சார்பில் சகல மரியாதையுடன் பெனாடின் இறுதிச் சடங்கை நடத்த விரும்புவதாகவும் அபாட் தெரிவித்துள்ளார்.
பெனாடின் மரணத்தைத் தொடர்ந்து சிட்னி துறைமுக பாலத் தில் உள்ள தேசியக் கொடி உள்ளிட்ட அனைத்து கொடிகளும் அரைக் கம்பத்தில் பறக்கவிடப் பட்டுள்ளன. ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக பெனாட் விளையாடிய சிட்னி மைதானம் திறந்துவிடப்பட்டது. அங்குள்ள பெனாடின் வெண்கல சிலை முன்பு மலர் கொத்துகளை வைத்து ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
லெக் ஸ்பின்னரும், அதிரடி பேட்ஸ்மேனுமான பெனாட் 63 டெஸ்ட் போட்டிகளில் விளை யாடி 2,201 ரன்களையும், 248 விக்கெட்டுகளையும் வீழ்த்தி யுள்ளார். 1964-ல் சர்வதேச கிரிக் கெட்டிலிருந்து ஓய்வுபெற்றபோது ஆஸ்திரேலியாவின் முன்னணி டெஸ்ட் பவுலராக இருந்தார் பெனாட். டெஸ்ட் போட்டியில் 2000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நபர் பெனாட்தான். இதுதவிர 16 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
1956 முதல் 1964 வரை ஆஸ்திரேலிய அணிக்கு 28 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். அவர் கேப்டனாக இருந்த காலத்தில் ஆஸ்திரேலிய அணி ஒரு தொடரைக்கூட இழந்தது கிடையாது. 1958-59-ல் ஆஷஸ் தொடரில் வெற்றி தேடித் தந்தார். 1960-61-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக ஆடினார்.
அந்தத் தொடரில் பிரிஸ்பேனில் நடந்த டெஸ்ட் டையில் முடிந்தது. டெஸ்ட் வரலாற்றில் டையில் முடிந்த முதல் டெஸ்ட் அதுதான். 1961-ல் மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிசய வெற்றியை ஆஸ்திரேலியாவுக்கு பெற்று தந்தார்.
1964-ல் ஓய்வு பெற்ற பிறகு வர்ணனையாளராக அவதாரம் எடுத்த பெனாட், கிரிக்கெட் ஆடியபோது எந்த அளவுக்கு புகழ் பெற்றாரோ அதே அளவுக்கு வர்ணனையிலும் முத்திரைப் பதித்தார். வர்ணனையில் பல்வேறு புதுமைகளைக் கையாண்ட அவர், ரசிகர்களுக்கு தெரியாத பல்வேறு புதிய விஷயங்களை சொல்வார். அது ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. பெனாடை பின்பற்றி பல கிரிக்கெட் வீரர்கள் வர்ணனையாளராக உருவெடுத்தனர்.
சச்சின் இரங்கல்
மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘பெனாடின் மறைவு சர்வதேச கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய இழப்பாகும். கிரிக்கெட் பற்றிய அவருடைய நுண்ணறிவு அபரிமிதமானது. அவருடன் கலந்துரையாடிய இனிய நினைவுகள் எனக்குள் இருக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் மைக்கேல் கிளார்க், ‘பெனாட்தான் எங்களுக்கு தூண்டுகோல். அவருடைய வர்ணனையை கேட்டுத்தான் நாங்கள் வளர்ந்தோம். அவர் மிகச்சிறந்த வீரர் மட்டுமல்ல, கேப்டனும்கூட. அவர் ஒரு அற்புதமான தலைவர் என்பதை களத்தில் மட்டுமல்ல, களத்துக்கு வெளியேயும் காட்டினார்’என குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ஜாம்பவான்கள் உள்ளிட்ட பலர் பெனாடின் மறை வுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். ஐசிசியும் இரங்கல் தெரிவித் துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago