வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தான் அணி மீது முன்னாள் வீரர்கள் சிலர் விமர்சன மழை பொழிந்துள்ளனர்.
முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரஷீத் லடீஃப் கூறும் போது, “கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 90 வீரர்களைக் களமிறக்கியுள்ளோம். இதைவிட மோசமனது நாம் அவர்களை நல்ல நிலையில் ஆடுவதற்கான கால அவகாசத்தையும் கொடுக்கவில்லை என்பதே.
தொடக்க ஆட்ட ஜோடிகளில் 19 வேறுபட்ட சேர்க்கையை முயற்சி செய்துள்ளோம். பந்துவீச்சில் கேட்கவே வேண்டாம்.. நிறைய வீச்சாளர்கள் வந்தார்கள்.. சென்றார்கள்..இதன் காரணமாகவே பாகிஸ்தான் அணி நிலைபெறவில்லை” என்றார்.
மற்றொரு முன்னாள் பாக். நட்சத்திர வீரர் ஜாவேத் மியாண்டட் கூறும் போது, “வங்கதேசத்துடன் தோற்பது என்பது பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு கீழிறங்கிய நிலையாகும். பெரிய அளவில் நாம் நிலைமைகளை சீர் செய்யவில்லை எனில் பாகிஸ்தான் கிரிக்கெட் மெல்ல இனி சரிவடையும், நலிவடையும்.
இதனைக் கூறும் போது மற்றொன்றையும் கூறிவிட வேண்டும், வங்கதேசம் முன்பு இருந்த அணி கிடையாது, இப்போது அவர்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும், நாளுக்கு நாள் அந்த அணியிடம் முன்னேற்றம் தெரிகிறது” என்றார் ஜாவேத் மியாண்டட்.
முன்னாள் விக்கெட் கீப்பர் வாசிம் பாரி கூறும் போது, “பாகிஸ்தான் அணியிடம் உத்திகளே இல்லை. திட்டமிடுதலும் இல்லை. இதனால்தான் அவர்களது மோசமான ஆட்டம் அம்பலமானது.
உலகக் கோப்பைக்கு பிறகே வங்கதேச அணி நல்ல புத்துணர்வுடன் இயங்கி வருகிறது, ஆனால் பாகிஸ்தானோ வீழ்ச்சியைச் சந்திக்கிறது” என்றார்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago