மாட்ரிட் ஓபன்: காலிறுதியில் செரீனா, லீ நா

By செய்திப்பிரிவு

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், சீனாவின் லீ நா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். உலகின் 2-ம் நிலை வீராங்கனையான லீ நா 2-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் சர்வதேச தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸை தோற்கடித்தார்.

நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் கார்லா சுரேஜை தோற்கடித்து காலிறுதியை உறுதி செய்தார். தொடர்ந்து 3-வது முறையாக மாட்ரிட் ஓபனில் பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ள செரீனா, தனது காலிறுதியில் உலகின் 5-ம் நிலை வீராங்கனையான செக்.குடியரசின் பெட்ரா விட்டோவாவை சந்திக்கிறார்.

விட்டோவா தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான லூஸி சபரோவாவைத் தோற்கடித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்