ஐபிஎல் தொடக்க போட்டிகளில் ஸ்டார்க் விளையாடமாட்டார்

By பிடிஐ

ஐபிஎல் தொடக்க போட்டிகளில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள அவர், முழங்காலில் ஏற்பட்டுள்ள சிறு காயம் காரணமாக 3 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர்நாயகன் விருதை வென்ற மிட்செல் ஸ்டார்க், ஐபிஎல் தொடக்க ஆட்டங்களில் விளையாடாதது பெங்களூர் அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. கடந்த சீசனில் மிட்செல் ஸ்டார்க் 14 ஆட்டங்களில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான நியூஸிலாந்தின் ஆடம் மில்னி, காயம் காரணமாக உலகக் கோப்பையில் இருந்து விலகியிருந்தார். அவரும் விளையாடுவது சந்தேகமாகவே உள்ளது. அதனால் பெங்களூர் அணி வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் வருண் ஆரோன், அசோக் திண்டா, ஆஸ்திரேலியாவின் சீன் அபாட் ஆகியோரையே நம்பியுள்ளது.

பிராட்மேனின் இளம் கிரிக்கெட் வீரர் விருதை வென்ற சீன் அபாட்டை கடந்த பிப்ரவரியில் நடந்த ஏலத்தின்போது பெங்களூர் அணி வாங்கியது. முதல்முறை யாக ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ள அபாட் மீது பெரும் எதிர்பார்ப்புள்ளது.

சீன் அபாட் வீசிய அதிவேக பவுன்சரில்தான் ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேனான பிலிப் ஹியூஸ் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்