ஐபிஎல் போட்டியில் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப்.
திங்கள்கிழமை டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் 9 வெற்றிகளுடன் பிளே ஆப் சுற்றில் விளையாடுவதை பஞ்சாப் அணி உறுதி செய்தது.
இதுவரை 11 போட்டிகளில் பங்கேற்றுள்ள பஞ்சார் அணி 9 வெற்றிகளையும், 2 தோல்வி களையும் பெற்றுள்ளது. இதன் மூலம் 18 புள்ளிகளுடன், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் பஞ்சாப் உள்ளது. பஞ்சாப் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. தினேஷ் கார்த்திக் 44 பந்துகளில் 69 ரன்களும், கெவின் பீட்டர்சன் 32 பந்துகளில் 49 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து விளையாடிய பஞ்சாப் 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஓரா, அக்ஸர் பாட்டீல் ஆகியோர் தலா 42 ரன்கள் எடுத்தனர். அதில் ஓரா 19 ரன்களில் 42 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது டெல்லி அணிக்கு 7-வது தொடர் தோல்வியாகும். 12 போட்டிகளில் பங்கேற்றுள்ள அந்த அணி 10 போட்டிகளில் தோல்வி, 2 போட்டிகளில் என்ற நிலையுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அடுத்த சுற்று வாய்ப்பை ஏற்கெனவே அந்த அணி இழந்துவிட்டது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago