ஐபிஎல் தொடரிலிருந்து ஆரோன் ஃபிஞ்ச் விலகல்

By பிடிஐ

மும்பை இண்டியன்ஸ் தொடக்க வீரர் ஆரோன் ஃபிஞ்ச் காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்.

கடந்த வாரம் அகமதாபாத்தில் நடைபெற்ற மும்பை-ராஜஸ்தான் இடையிலான ஆட்டத்தின்போது ரன் எடுக்க ஓடிய ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் ஃபிஞ்ச் காயமடைந்து போட்டியிலிருந்து உடனடியாக வெளியேறினார்.

பின்னர் அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருடைய இடது தொடைப் பகுதியில் தசைநார் முறிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அவர் காயத்திலிருந்து குணமடைய 12 வாரங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் முடநீக்கியல் நிபுணர் அலெக்ஸ் கொன்டூரிஸ் கூறுகையில், “ஐபிஎல் போட்டியிலிருந்து திரும்பிய ஆரோன் ஃபிஞ்சுக்கு பெரிய அளவில் தசைநார் முறிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் முழுமையாகக் குணமடைய 12 வாரங்கள் ஆகும்” என்றார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

51 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்