இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வா கத்தில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா தலைமையிலான தேர்வுக் குழுவினர் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள் ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவினருடைய பதவிக் காலம் கடந்த 31-ம் தேதி முடிந்தது. ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு தேர்தல் நடத்தப் படாமல் இடைக்கால கமிட்டி அமைக்கப்பட்டதால், ஜெயசூர்யா தலைமையிலான தேர்வுக் குழுவினர் தொடர்ந்து செயல்பட உத்தரவிடப்பட்டது.
அதேநேரத்தில் ஜெயசூர்யா தலைமையிலான குழுவினருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட வாய்ப்பில்லை என தகவல் வெளியானதைத் தொடர்ந்து அவர்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் நவீன் திசநாயகேவுக்கு அனுப்பிள்ள ராஜினாமா கடிதத்தில் ஜெயசூர்யா கூறியிருப்பதாவது: நான் தேர்வுக்குழு தலைவராக இருந்த காலத்தில் டி20 உலகக் கோப்பை, ஆசிய கோப்பை, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றை இலங்கை அணி வென்றதை நினைத்து மிகுந்த பெருமை அடைகிறேன்.
எதிர் காலத்தில் இலங்கை கிரிக்கெட்டுக் காக பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன். எப்போது வேண்டு மானாலும் என்னை அழைக்கலாம். இலங்கை கிரிக்கெட் வாரியமும், இலங்கை கிரிக்கெட் அணியும் தொடர்ந்து வெற்றி நடைபோட எனது வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago