கோவையில் மாநில அளவிலான சீனியர் தடகள போட்டிகள் நாளை தொடங்குகின்றன.
இது குறித்து கோவை மாவட்ட தடகள சங்க தலைவர் எல்.பி.தங்கவேலு செய்தியாளர் களிடம் புதன்கிழமை கூறியதாவது:
தமிழ்நாடு தடகள சங்கத்தின் சார்பில் 87-வது சீனியர் தடகளப் போட்டிகள் கோவை நேரு விளையாட்டு அரங்கில் வரும் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறு கின்றன. இப் போட்டியில் தமிழகத் தில் இருந்து சுமார் ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள் கின்றனர். செயின் ஜோசப் விளை யாட்டு அகாதெமி, காவல்துறை அணி, தென்னக ரயில்வே அணி, வருமான வரித்துறை, எல்.ஐ.சி., இந்தியன் வங்கி மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் கலந்து கொள்கின்றன. தமிழகத் தின் முன்னணி வீரர்களான பிரேம்குமார், சலாவுதீன், ஹேமா, அர்ச்சனா, நிகில் சிற்றரசு, அன்பு உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
போட்டிகள் காலை 6 மணிக்கு தொடங்கி 11 மணி வரையிலும் மாலை 2.30 மணியில் இருந்து 6.30 மணி வரையிலும் இரு நாள்கள் நடைபெறுகின்றன. 100 மீ., 200 மீ., 5,000 மீ., 10,000 மீ. ஓட்டங்கள், 20 கிலோ மீட்டர் நடைப் போட்டிகள், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தடை தாண்டுதல் உள்ளிட்ட 22 போட்டிகள் நடைபெறுகின்றன.
இப்போட்டியின் மூலம் ஜூன் மாதம் 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை லக்னோளவில் நடைபெறவுள்ள அகில இந்திய தடகளப் போட்டிக்கான தமிழக அணி தேர்வு செய்யப்படவுள்ளது. லக்னோ போட்டி, காமன்வெல்த் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டியாகும் என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago