ஸ்லிப் திசையிலோ அல்லது லெக் திசையிலோ ஓரளவுக்கு தள்ளி கேட்ச் சென்றால் அதனை பிடிக்க விக்கெட் கீப்பர் தோனி சில காலங்களாக முயற்சி எடுப்பதில்லை.
இந்தியாவின் தலைசிறந்த விக்கெட் கீப்பரான தோனி சில வேளைகளில் அத்தகைய கேட்ச்களை அருமையாக பிடித்த தருணங்களும் உண்டு. ஆனால் சமீப காலங்களில் அவர் அத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவதில்லை.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் முதலில் 8-0 என்று இரு அணிகளுக்கு எதிராக உதை வாங்கிய போதும் சரி, அதன் பிறகு சமீபத்தில் இங்கிலாந்து தொடரில் 3-1 என்று இந்திய அணி டெஸ்ட் தொடரில் தோல்வி தழுவிய போதும் சரி, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டித் தொடரில் பாதியிலேயே ஓய்வு அறிவித்த தோனி பல கேட்ச்களுக்கு ஒரு விக்கெட் கீப்பராக முயற்சி செய்யாமல் வேடிக்கை பார்த்தது அவ்வப்போது வர்ணனையாளர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
போட்டியை தொலைக்காட்சியில் பார்ப்பவர்களுக்கும் தோனியின் இந்த முயற்சியின்மை நன்றாக பரிச்சயம் உண்டு. இதில் எத்தனையோ வேகப்பந்து வீச்சாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய அனுபவத்தில் தோனியிடம் ஆஷிஷ் நெஹ்ராவுக்கு சில அனுபவங்கள் உண்டு.
ஒரு முறை 2005-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டி. அதில் ஷாகித் அஃப்ரீடி பயங்கரமாக இந்தியப் பந்துவீச்சை புரட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அந்த நிலையிலும் ஆஷிஷ் நெஹ்ரா, அப்ரீடிக்கு ஒரு அருமையான பந்தை வீசி ஸ்விங் செய்தார், பந்து மட்டையின் வெளி விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் தோனிக்கும், முதல் ஸ்லிப்பில் கேப்டன் திராவிடுக்கும் இடையே சென்றது ஆனால் இருவரும் முயற்சி செய்யவில்லை.
கிளவ் இல்லாததால் முதல் ஸ்லிப் பீல்டர்கள், குறிப்பாக வலது கை வாகு பீல்டர்கள் இடது புறமாக டைவ் அடிப்பது என்பது இயல்பாக வராத ஒன்று. ஆனால் விக்கெட் கீப்பர் கையில் பெரிய கிளவ்வுடன் இருப்பதால் இத்தகைய கேட்ச்களுக்குச் செல்வது வழக்கம், பிடிக்க முடிகிறதோ இல்லையோ மாற்றமின்றி எந்த ஒரு விக்கெட் கீப்பரும் இத்தகைய கேட்சிற்கு ஒரு முயற்சி எடுப்பதையே நாம் பார்த்து வந்திருக்கிறோம். ஆனால் தோனி அன்று நெஹ்ராவின் பந்துக்கு அப்ரீடியின் எட்ஜை பிடிக்க முயற்சி செய்யாமல் வேடிக்கை பார்த்தார்.
“எளிதான கேட்சைக் கூட பிடிக்க முடியவில்லை” என்று நெஹ்ரா கூறியதாக அப்போது ஓரிரு ஊடகங்கள் இதனை சுட்டிக்காட்டின. இது நெஹ்ரா, தோனி கூட்டணியில் ஒரு அனுபவம்.’ அப்போது திராவிட் கேப்டன், தோனி எதிர்கால கேப்டன்.
நேற்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 135 ரன்கள் இலக்கை எதிர்த்து முதல் 5 ஓவர்களில் உத்தப்பாவின் ‘சப்லைம்’ பேட்டிங்கினால் 52 ரன்களை எடுத்து அபாரமாகச் சென்று கொண்டிருந்தது.
ஆட்டத்தின் 5-வது ஓவரை நெஹ்ரா வீச, கொல்கத்தா வீரர் மணீஷ் பாண்டே பந்தை எட்ஜ் செய்தார். இம்முறை தோனிக்கும் அஸ்வினுக்கும் இடையே கேட்ச் பிடிக்க முடியுமாறு சென்றது. ஆனால் தோனி கேட்சிற்கு முயற்சி செய்யவில்லை.
சாதாரணமாக கிரிக்கெட் அறிந்தவர்களுக்குக் கூட தெரியும் இப்படிப்பட்ட கேட்ச்கள் விக்கெட் கீப்பரின் கேட்ச்கள் என்று. ஆனால் தோனி இத்தகைய கேட்ச்களுக்கு செய்யும் முயற்சிகளை சில சமயங்களில் செய்வதில்லை. இந்த முறை அஸ்வினுக்கும் தோனிக்கும் இடையே பந்து சென்றது.
2005-இல் கேப்டன் திராவிட் முதல் ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்தார், தோனி விக்கெட் கீப்பர், நேற்று தோனி கேப்டன்/விக்கெட் கீப்பர், முதல் ஸ்லிப்பில் அஸ்வின்.
நெஹ்ராவின் பந்துவீச்சில் பெரிய முன்னேற்றம் தெரிகிறது. ஆனால் தோனியின் விக்கெட் கீப்பிங்...?
உலகக் கோப்பையில் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வி தழுவி வெளியேறிய பிறகு தோனியிடம், இதுதான் கடைசி உலகக் கோப்பையா என்று கேட்ட போது, தோனி, “என் வயது 33. நான் நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறேன்” என்று கூறியது இங்கு நினைவுகூரத் தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 mins ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago