தவான்,வார்னர் அதிரடியில் நிலைகுலைந்தது பெங்களூரு; சன் ரைசர்ஸ் அபார வெற்றி

By செய்திப்பிரிவு

ஐதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றேயாக வேண்டிய நிலையில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை அபார பேட்டிங்கினால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தத் தோல்வியினால் தற்போது பெங்களூரு அணி மற்ற போட்டிகளிலும் வென்று மற்ற அணிகள் தோல்வியையும் எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.

161 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சன் ரைசர்ஸ் 2 பந்துகள் மீதமிருக்கையில் 161/3 என்று ஸ்கோர் செய்து அபார வெற்றியை ஈட்டியது. பெங்களூரு அணி முரளிதரனை வைத்து பந்து வீச்சைத் துவக்கியது தவான் ஒரு அபாரமான கவர் டிரைவுடன் எண்ணிக்கையைத் தொடங்கினார்.

2வது ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீச 3வது பந்து மீண்டும் கவர் திசையில் தவானால் பவுண்டரிக்கு அனுப்பப்பட்டது. அடுத்த பந்து கெய்ல் சரியான இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தால் கேட்ச் ஆகியிருக்கும் ஆனால் பந்து பவுண்டரிக்குப் பறந்தது.

3வது ஓவர் தவறாக ஆரோனுக்கு அளிக்கப்பட, அவரோ தவானின் பொறுமையை சோதிக்கும் விதமாக பவுன்சர் ஒன்றை வீச தோள்பட்டைக்கு உயர்ந்த அந்தப் பந்தை ஃபைன் லெக் திசையில் அபாரமாக ஹூக் ஆடி சிக்சருக்குத் தூக்கினார். அடுத்த பந்து மீண்டும் ஷாட் பிட்ச் இந்த முறை பவுண்டரி விளாசப்பட்டது.

அடுத்த ஓவர் வார்னர் தன் பவுண்டரிக் கணக்கைத் தொடங்க மீண்டும் தவான் ஒரு பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் 14 ரன்கள் வந்தது. 5வது ஓவர் மீண்டும் முரளி அழைக்கப்பட சிக்கனமாக விசி 5 ரன்களையே விட்டுக் கொடுத்தார். அடுத்த ஓவரும் 6 ரன்களே வர பவர் பிளே முடிவில் சன் ரைசர்ஸ் 51/0 என்று சௌகரியமாக இருந்தது.

அடுத்த 4 ஓவர்களை ஆரோன், சாஹல், அகமட் சிறப்பாக வீச 10வது ஓவர் முடிவில் 72/0 என்று இருந்தது. அதாவது பவர் ப்ளேயிற்குப் பிறகு 4 ஓவர்களில் 21 ரன்களே எடுக்க முடிந்தது. ஆனால் விக்கெட்டு விழாதது பெங்களூருவுக்கு பின்னடைவையே கொடுத்தது.

11வது ஓவர் இறுக்கத்தை தளர்த்தினார் வார்னர், முரளி வீச மேலேறி வந்து லாங் ஆன் திசையில் சிக்ஸ் அடித்தார். பிறகு தவானும் மேலேறி வந்து இன்சைடு அவுட் சென்று கவர் திசையில் ஒரு பவுண்டரி விளாசினார். அந்த ஓவரில் 11 ரன்கள் வந்தது.

12வது ஓவரை சாஹல் வீச இரண்டு ஷாட் பிட்ச் பந்துகளை வார்னர் மிட்விக்கெட்டில் அடுத்தடுத்து சிக்சருக்குத் தூக்கினார். ஆனால் அடுத்த பந்தே பாயிண்டில் வார்னர் தட்டி விட யுவ்ராஜிடம் பந்து நேராகச் செல்ல தவானால் ரீச் ஆக முடியாமல் ரன் அவுட் ஆனார். தவான் 39 பந்துகளில் 7 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 50 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

13வது ஓவர் முடிவில் ஸ்கோர் 101/1 என்று இருந்தது. நமன் ஓஜா களமிறங்கி உடனேயே சாஹல் பந்தை சிக்சருக்கு விளாசினார். 17வது ஓவரில் 46 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர் சகிதம் 59 ரன்கள் விளாசிய வார்னர் வருண் ஆரோன் புல்டாஸில் யுவ்ராஜிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அதன் பிறகு ஓஜா இன்னொரு சிக்சரை விளாசி 24 ரன்கள் எடுத்து ஆரோன் பந்தில் மீண்டும் யுவ்ராஜ் கேட்ச் பிடிக்க வெளியேறினார். இப்போதும் சன் ரைசர்ஸுக்கு ஆபத்து ஒன்றுமில்லை. ஆரோன் பின்ச் 11 ரன்களையும் டேரன் சாமி 10 ரன்களையும் எடுக்க சன் ரைசர்ஸ் அபார வெற்றி பெற்றது.

டேவிட் வார்னர் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். முதல் 10 ஓவர்களில் 48 ரன்களையே பெங்களூரு எடுத்ததால் தோல்வி ஏற்பட்டது.

முன்னதாக முதலில் பேட் செய்த ராயல் சாலஞ்சர்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்துது.
முதல் 10 ஓவர்களில் சன் ரைசர்ஸ் அணியின் சிக்கனமான பந்து வீச்சின் காரணமாக 2 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்களையே எடுத்திருந்த பெங்களூரு கடைசி 10 ஓவர்களில் 112 ரன்களை விளாசியது.

வீராட் கோலி அபாரமாக பேட் செய்து 41 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 67 ரன்கள் எடுத்தார். யுவ்ராஜ் சிங் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 21 பந்துகளில் 25 ரன்களையும் டிவிலியர்ஸ் 17 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிகருடன் 29 ரன்களையும் எடுத்து உதவி புரிந்தனர்.

துவக்கத்தில் புவனேஷ் குமார் அபாரமாக வீசினார். பார்த்தீவ் படேல் (4) அபார பந்துக்கு எல்.பி. ஆனார். கெய்லின் ஆட்டமும் எடுபடவில்லை அவர் 20 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ரசூல் கேட்ச் பிடிக்க ஷர்மாவிடம் அவுட் ஆகி வெளியேறினார்.

பிறகு யுவ்ராஜ், கோலி இணைந்து 7 ஓவர்களில் 57 ரன்களை சேர்த்தனர். கோலியும், டிவிலியர்ஸும் இணைந்து 5 ஓவர்களில் 63 ரன்களை விளாசினர். அடி வாங்கியது டேரன் சாமி. இவர் ஒரே ஓவர் வீசி 19 ரன்களை விட்டுக் கொடுத்தார். இர்பான் பத்தான் 3 ஓவர்களில் 28 ரன்களை வழங்கி ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இருவரும் பெங்களூரு அணி 160 ரன்கள் எடுக்க உதவினர். ஆனால் புவனேஷ், டேல் ஸ்டெய்ன் சிக்கனமாக வீச, முதல் போட்டியில் ஆடும் ஜம்மு காஷ்மீர் விரர் பர்வேஸ் ரசூல் அபாரமாக வீசி 4 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்