ஆசிய பாட்மிண்டன் சாம்பி யன்ஷிப் போட்டியில் இந்தியாவின் காஷ்யப், பி.வி.சிந்து ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
சீனாவின் உஹான் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் காஷ்யப் 15-21, 21-18, 21-19 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் ஜென் ஹாவ் சூவை தோற்கடித்தார்.
காஷ்யப் தனது 3-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் சீனாவின் ஜெங்மிங் வாங்கை சந்திக்கிறார். வாங் தனது 2-வது சுற்றில் 21-10, 21-12 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் பூன்சாக் பொன்சனாவை வீழ்த்தினார். வாங்குடன் இதற்கு முன்னர் 4 முறை மோதியுள்ள காஷ்யப் ஒரு வெற்றியையும், 3 தோல்வியையும் பதிவு செய்துள்ளார்.
மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்தியாவின் சிந்து 21-6, 21-5 என்ற நேர் செட்களில் உஸ்பெகிஸ்தானின் அனாய்ட்டை 16 நிமிடங்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த சிந்து, ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் நேரடியாக 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தார். சிந்து தனது அடுத்த சுற்றில் போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் மகாவின் யூ டென் லோக்கை சந்திக்கிறார்.
ஆடவர் இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் அக் ஷய் தேவால்கர்-பிரணாவ் ஜெர்ரி சோப்ரா ஜோடி 15-21, 17-21 என்ற நேர் செட்களில் ஜப்பானின் ஹிரோயூகி என்டோ-கெனிஸி ஹயகவா ஜோடியிடம் தோல்வி கண்டது.
மற்றொரு இந்திய ஜோடியான மானு அத்ரி-சுமீத் ரெட்டி ஜோடியை எதிர்த்து விளையாடவிருந்த ஆப்கானிஸ்தானின் அஹமது ஷெகிப்-அஹமது பஹீம் ஜோடி போட்டியிலிருந்து விலகியது. இதனால் மானு ஜோடி 3-வது சுற்றுக்கு முன்னேறியது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago