இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நியமிக்கப் படவுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த டங்கன் பிளெட்சரின் பதவிக்காலம் கடந்த உலகக் கோப்பை போட்டியோடு முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து புதிய பயிற்சியாளரைத் தேடும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ள நிலையில், முன்னாள் கேப்டன் கங்குலி புதிய பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக மேற்கு வங்க கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் கூறியதாவது: இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்புவதாக பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியாவிடம் கங்குலி தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்த கங்குலி துடிப்பு மிக்க கேப்டனாக திகழ்ந்தவர். இதேபோல் மிகச் சிறந்த உத்திகளை கொண்டவர். இதுபோன்ற விஷயங்கள் அவர் பயிற்சியாளராக நியமிக்கப் படுவதற்கான வாய்ப்பை அதிகரித் துள்ளன. பயிற்சியாளர் பதவி தொடர்பாக டால்மியாவிடம் கங்குலி ஆலோசனை நடத்தி யுள்ளார். ஆனால் டால்மியா, கங்குலிக்கு எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பயிற்சியாளராக விரும்பு பவர்கள் அதற்கு விண்ணப்பிக்க வேண்டும். தங்களின் உத்திகள், அணியை வலுப்படுத்துவதற்காக வைத்துள்ள திட்டங்கள் குறித்து விவரிக்க வேண்டும். அதன்பிறகு நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும். பிசிசிஐ நிர்வாகிகள் குழு மற்றும் அணியின் கேப்டன் ஆகியோர் இணைந்து புதிய பயிற்சி யாளரைத் தேர்வு செய்வார்கள்.
திராவிடுக்கும் வாய்ப்பு
பிசிசிஐ நிர்வாகிகளில் சிலர் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர். அதனால் பயிற்சியாளர் போட்டியில் அவரும் உள்ளார்.
ராகுல் திராவிட் அனைவராலும் மதிக்கப்படக்கூடியவர். தற்போது ராஜஸ்தான் அணியின் பயிற்சி யாளர் மற்றும் ஆலோசகராக இருந்து வரும் அவர், அந்தப் பணி களை சிறப்பாக செய்து வருகிறார். தற்போதுள்ள இளம் அணியை திறமையாக முன்னெடுத்து செல்ல வேண்டும் என விரும்புகிறோம். பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் திராவிட் முதல் நபராக இருக்கிறார் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago