ஐபிஎல்: சென்னையை பந்தாடியது ராஜஸ்தான்

By செய்திப்பிரிவு

அகமதாபாத்தில் நேற்று நடை பெற்ற ஐபிஎல் போட்டியில் சென் னை சூப்பர் கிங்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளி தாக வீழ்த்தியது. 157 ரன்கள் இலக்கைத் துரத்திய ராஜஸ்தான் வாட்சன், ரஹானே ஆகியோரின் அற்புதமான ஆட்டத்தால் 18.2 ஓவர்களில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற சென்னை அணி யின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். வழக்கம்போல அதிரடி காட்டிய மெக்கல்லம் 3 பவுண்டரிகளுடன் திருப்தியடைந்து 12 ரன்களில் வெளியேறினார். ரெய்னா 4 ரன்களில் மோரிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். டூ பிளெஸிஸ் ஒரு ரன்னில் வெளியேற 6.2 ஓவர்களில் சென்னை அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

மறுமுனையில் ஸ்மித் அதிர டியைத் தொடர்ந்தார். அவருடன் இணைந்த பிராவோவும் விளாச ரன் வேகமாக உயர்ந்தது. ஆனால், ஸ்மித்தை ஃபாக்னர் வெளி யேற்றினார். ஸ்மித் 29 பந்துகளில் 40 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் பிராவோவுடன் தோனி ஜோடி சேர்ந்தார். பிராவோ அடித்து விளையாடினாலும் தோனி ரன் குவிப்பதில் சிரமம் ஏற்பட்டது. தோனி களமிறங்கும்போது 10.5 ஓவர்கள் இருந்ததால் சென்னை அதிக ரன்னைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராஜஸ்தான் அணியில் மோரிஸும், ஃபாக்னரும் நேர்த்தியாக பந்து வீசியதால் தோனியின் மட்டை வீச்சு எடுபடவில்லை. இதனால் ரன் வேகம் வெகுவாகக் குறைந்தது. இதனிடையே 29 பந்துகளில் அரை சதம் அடித்தார் பிராவோ.

20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் குவித்தது சென்னை. தோனி 37 பந்துகளில் 31 ரன்களும், பிராவோ 36 பந்துகளில் 62 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந் தனர்.

அதிரடி தொடக்கம்

பேட்டிங்கில் ஜொலிக்காத சென்னை பந்துவீச்சில் நெருக் கடியை ஏற்படுத்தும் என எதிர் பார்ப்பு நிலவியது. ஈஸ்வர் பாண்டே வீசிய முதல் ஒவரில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. ஆனால், 3-வது ஓவரிலிருந்து நிலைமை மாறியது. ராஜஸ்தானின் அஜிங்க்ய ரஹானேவும் வாட் சனும் சென்னை பந்துவீச்சை நொறுக்கினர்.

வாட்சன் சிக்ஸர்களாக விரட்ட, ரஹானே பவுண்டரிகளாக விரட்டினார். 10-வது ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி ராஜஸ்தான் 88 ரன்கள் குவித்தது. அப்போது வாட்சன், ரஹானே இருவருமே தலா 30 பந்துகளைச் சந்தித்து தலா 44 ரன்கள் குவித்திருந்தனர்.

பிராவோ வீசிய 12 ஓவரின் 3-வது பந்தை சிக்ஸருக்கு அனுப்பிய வாட்சன் 35 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதே ஓவரில் மேலும் இரு பவுண்டரிகளையும் வாட்சன் விளாசினார்.

ரஹானேவும் 35 பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து இருவரும் அதிரடியாக ரன்குவிக்க ராஜஸ்தான் வேகமாக வெற்றி இலக்கை நெருங்கியது.

ராஜஸ்தான் ராயல்ஸ் 16 ஓவர் முடிவில் 144 ரன்கள் குவித்தது. வெற்றிக்கு 24 பந்துகளில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜடேஜா பந்தில் போல்டாகி வெளியேறினார் வாட்சன். அவர் 47 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். இதில், 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கும்.

பின்னர் வந்த ஸ்மித், வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் பிராவோ பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 6 ரன்கள் எடுத்தார். அடுத்து ஃபாக்னர் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கருண் நாயர் களமிறங்கினார். அவர் முதல் பந்திலேயே ஒரு ரன் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

18.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் 8 விக்கெட் வித்தியா சத்தில் சென்னையை வென்றது. ரஹானே ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். இதில், 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கும். ஆட்ட நாயகன் விருது ரஹானேவுக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 5 போட்டிகளிலும் வென்றுள்ள ராஜஸ்தான் 10 புள்ளி களுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

போட்டித் துளிகள்:

அஜிங்க்ய ரஹானே இத்தொடரில் இதுவரை 231 ரன்கள் குவித்துள்ளார். இதுதான் ஒரு வீரரின் அதிகபட்ச ரன்னாகும்.

ராஜஸ்தான் அணியின் தொடக்க ஜோடி இதுவரை 8 முறை 100 ரன்கள் அல்லது அதற்கு மேல் குவித்துள்ளது. ஐபிஎல் தொடரில் இதுதான் அதிகபட்சமாகும்.

150 மற்றும் அதற்கும் மேற்பட்ட ரன் இலக்கை சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் தலா 17 முறை துரத்தி வெற்றி பெற்றுள்ளன.

நேற்றைய போட்டியில் சென்னை அணி பந்துவீச்சில் ஒரே ஒரு உதிரி ரன் மட்டுமே கொடுத்திருந்தது. சென்னை அணி வழங்கிய குறைந்தபட்ச உதிரி ரன் இதுதான்.

15 ஓவர் முடிவில் சென்னை 106 ரன்களே குவித்திருந்தது. இத்தொடரில் சென்னையின் குறைந்தபட்சம் இதுதான்.

இத்தொடரில் பவர்பிளே ஓவர்களில் சென்னை அணி சராசரியாக 59 ரன்களைக் குவித்துள்ளது. மற்ற அணிகளை விட இதுவே அதிகம். ஆனால், நேற்றைய போட்டியில் சென்னை 39 ரன்களை மட்டுமே குவித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 mins ago

விளையாட்டு

46 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்