நிர்வாகிகளிடையே மோதல்: இந்திய பாராலிம்பிக் கமிட்டி சஸ்பெண்ட் - சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி அதிரடி

By பிடிஐ

நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதல், தேசிய அளவிலான பாரா (மாற்றுத்திறனாளிகள்) தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் போது வீரர்களுக்கு போதிய வசதிகளை செய்து கொடுக்காதது ஆகியவற்றின் எதிரொலியாக இந்திய பாராலிம்பிக் கமிட்டியை (பிசிஐ) காலவரையறையின்றி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி (ஐபிசி).

15-வது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் கடந்த 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது. அப்போது இந்திய பாராலிம்பிக் கமிட்டியினர் அக்கறையின்றி செயல்பட்டதோடு, வீரர்களுக்கு போதிய அளவுக்கு தங்கும் வசதி செய்துகொடுக்கவில்லை. மாற்றுத்திறனாளி வீரர்கள் தரையில் படுத்து தூங்கியுள்ளனர். அவர்கள் தங்கியிருந்த அறைகள் சுகாதாரமற்ற முறையில் இருந்துள்ளன. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதனிடையே இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் செயற்குழு கூட்டம் கடந்த 4-ம் தேதி பெங்களூரில் நடந்தது. அப்போது கமிட்டியின் தலைவர் ராஜேஷ் டோமர் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும், காஸியாபாத் போட்டிக்கு உரிய ஏற்பாடுகளை செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது. டோமரின் தலைவர் பதவி அந்தக் கூட்டத்திலேயே பறிக்கப்பட்டது. மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான 3 நபர் கமிட்டி அமைக்கப்பட்டது.

பிசிஐ நிர்வாகிகளிடையே மோதல் முற்றியதைத் தொடர்ந்து அதிரடி நடவடிக்கையில் இறங்கி யுள்ளது ஐபிசி. இமெயில் மூலம் பிசிஐக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஐபிசி கூறியிருப்பதாவது: பல ஆண்டுகளாக பிசிஐயில் ஏராள மான குளறுபடிகள் நிலவி வருகின் றன. பிசிஐ நிர்வாகிகள் பல்வேறு கோஷ்டிகளாக செயல்பட்டு வரு கின்றனர். இதனால் வீரர்களுக்கு எவ்வித நன்மையும் நடக்காது. எனவே பிசிஐ காலவரையறை யின்றி சஸ்பெண்ட் செய்யப்படு கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிசிஐ சஸ்பெண்ட் செய்யப் படுவது இது 2-வது முறையாகும். இது தொடர்பாக பேசிய பிசிஐ பொதுச் செயலாளர் சந்திரசேகர், “ஐபிசி கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. ஐபிசி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இந்திய ஓபன் பாரா விளையாட்டுப் போட்டி வரும் மே 2 முதல் 9-ம் தேதி வரை டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த நேரத்தில் பிசிஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதால் இந்திய வீரர்கள் இந்திய ஓபனில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும். எனவே சஸ்பெண்டை திரும்பப் பெறாவிட்டால் இந்திய ஓபன் போட்டியை ரத்து செய்ய நேரிடும்” என்றார்.

பிசிஐ சஸ்பெண்ட் செய்யப்பட்ட தைத் தொடர்ந்து அதிரடி நடவடிக் கையில் இறங்கியுள்ள மத்திய விளையாட்டு அமைச்சகம், விதி முறைகளை மீறியதற்காக உங் களின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு பிசிஐக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 mins ago

விளையாட்டு

22 mins ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்