நீண்ட கால தடையை எதிர்நோக்கும் வலுதூக்கும் வீராங்கனை கீதா ராணி

By பிடிஐ

இந்திய வலுதூக்குதல் வீராங்கனை கீதா ராணியின் மற்றொரு சாம்பிளும் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதற்கான தடயங்களைக் கொண்டுள்ளது.

இதனால் அவர் விளையாட நீண்ட காலம் தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. ஏற்கெனவே நடைபெற்ற சிறுநீர் பரிசோதனையில் தடை செய்யப்பட்ட மருந்துகளை கீதா ராணி பயன்படுத்தியது உறுதியான நிலையில் தற்போது சிறுநீர் 2-வது சோதனையிலும் இவர் தோல்வியடைந்தார்.

ஏற்கெனவே முதல் மாதிரியிலும் இவர் தடை செய்யப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொண்டது உறுதியானதால் தற்காலிகமாக தடை செய்யப்பட்டார். ஆனால் இப்போது மற்றொரு சாம்பிளும் இதனை உறுதி செய்ய இவர் விளையாட குறைந்தது 4 ஆண்டுகள் வரை தடைவிதிக்கப்படலாம் என்று விதிமுறைகள் கூறுகின்றன.

அதாவது முதல் முறையாக தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்து எடுத்துக் கொண்டது நிரூபணமானால் 4 ஆண்டுகள் தடை என்று புதிய விதிமுறைகள் தெரிவிக்கின்றன.

ஆனால் தற்போது ஏ-மாதிரி, பி-மாதிரி இரண்டிலும் ஒரே தடை செய்யப்பட்ட மருந்து காணப்படுவதால் 8 ஆண்டுகள் வரை தடைவிதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 33 வயதாகும் கீதா ராணியின் விளையாட்டு வாழ்க்கை ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டதாகவே இந்திய வலுதூக்குதல் விளையாட்டுக் கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்