மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
மொனாக்கோவின் மான்டி கார்லோ நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில் ஜோகோவிச் 7-5, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சை தோற்கடித்தார்.
இதன்மூலம் ஒரே சீசனில் இண்டியன்வெல்ஸ், மியாமி, மான்டி கார்லோ என 3 ஏடிபி மாஸ்டர்ஸ் போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ஜோகோவிச்.
இதுமட்டுமின்றி இந்த சீசனில் தொடர்ச்சியாக 17-வது வெற்றியைப் பதிவு செய்துள்ள ஜோகோவிச், இந்த சீசனில் 32 ஆட்டங்களில் விளையாடி 2-ல் மட்டும் தோல்வி கண்டுள்ளார். பெர்டிச்சுடன் இதுவரை 21 ஆட்டங்களில் மோதியுள்ள ஜோகோவிச், 19-ல் வெற்றி கண்டுள்ளார்.
வெற்றிக்குப் பிறகு பேசிய ஜோகோவிச், “உண்மையைச் சொல்வதானால் இதேபோன்று எவ்வளவு நாட்கள் விளையாட முடியும் என்பது பற்றி சிந்திக்கவில்லை. கடந்த 2011-லும் இதேபோன்று சிறப்பாக ஆடினேன். அப்போது தொடர்ச்சியாக 40 ஆட்டங்களில் வெற்றி பெற்றேன்” என்றார்.
ஜோகோவிச் இதுவரை 52 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். அதில் 23 பட்டங்கள் மாஸ்டர்ஸ் போட்டிகளுக்கு இணையானவையாகும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
47 mins ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago