முதல் வெற்றியை ருசிக்குமா மும்பை? - ராஜஸ்தானுடன் இன்று மோதல்

By செய்திப்பிரிவு

அகமதாபாத்தில் இன்றும் நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸும், ராஜஸ்தான் ராயல்ஸும் மோதுகின்றன.

முதல் இரு ஆட்டங்களிலும் தோற்றுள்ள மும்பை அணி, இந்த ஆட்டத்தில் எப்படியாவது ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்க முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் ராஜஸ்தான் அணியோ, முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளதால் மிகுந்த உற்சாகத்தோடு உள்ளது. இந்த ஆட்டத்திலும் அந்த அணி வெற்றியைத் தொடரும் முனைப்பில் களமிறங்கும்.

ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணிக்கு இப்போது மிகப்பெரிய பலமாக இருப்பது பரோடாவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் தீபக் ஹூடாதான். பஞ்சாபுக்கு எதிராக 15 பந்துகளில் 30 ரன்களும், டெல்லிக்கு எதிராக 25 பந்துகளில் 54 ரன்களும் எடுத்து அசத்திய ஹூடாவின் மீது இப்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவருடைய அதிரடி இந்த ஆட்டத்திலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூடா தவிர, அஜிங்க்ய ரஹானே, கேப்டன் ஸ்மித், ஸ்டூவர்ட் பின்னி போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளனர். ஜேம்ஸ் ஃபாக்னர், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் பேட்டிங், பவுலிங் என இரு துறைகளிலும் ராஜஸ்தானுக்கு பலம் சேர்க்கின்றனர்.

வேகப்பந்து வீச்சில் கிறிஸ் மோரிஸ், டிம் சவுதி, ஜேம்ஸ் ஃபாக்னர், ஸ்டூவர்ட் பின்னி ஆகியோரையும், சுழற்பந்து வீச்சில் பிரவீண் டாம்பேவையும் நம்பியுள்ளது ராஜஸ்தான்.

மும்பை அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, ஆரோன் ஃபிஞ்ச், ஆதித்ய தாரே, அம்பட்டி ராயுடு,ஆண்டர்சன், கிரண் போலார்ட் போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் இருந்தபோதிலும், கடந்த இரு ஆட்டங்களில் வெற்றி பெற முடியவில்லை. கொல்கத்தாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் மும்பையின் பந்துவீச்சு எடுபடவில்லை. ஆனால் பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை பேட்ஸ்மேன்கள் சொதப்பினர்.

எனவே பேட்டிங், பவுலிங் என இரு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டாலொழிய மும்பை வெற்றி பெற முடியாது.மும்பை அணியைப் பொறுத்தவரையில் கேப்டன் ரோஹித் சர்மா எப்படி தொடக்கம் ஏற்படுத்திக் கொடுக்கிறார் என்பதைப் பொறுத்துதான் அந்த அணியின் ரன் குவிப்பு அமையும். அந்த அணி வலுவான ஸ்கோரை எட்டுவதற்கு ஆரோன் ஃபிஞ்ச், கிரண் போலார்ட், ஆண்டர்சன் ஆகியோர் சிறப்பாக ஆடுவது முக்கியம். பஞ்சாபுக்கு எதிராக 24 பந்துகளில் 64 ரன்கள் குவித்த ஹர்பஜன் சிங்கிடம் இருந்து இந்த முறையும் ஒரு நல்ல இன்னிங்ஸை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பந்துவீச்சில் ஹர்பஜன் சிங், சுயால் ஆகியோரைத் தவிர யாரும் சொல்லிக்கொள்ளும்படி வீசவில்லை. மலிங்கா, வினய் குமார் ஆகியோர் எப்படி பந்துவீசுகிறார்கள் என்பதைப் பொறுத்தே மும்பையின் வெற்றி வாய்ப்பு அமையும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்