ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடிய மிகப்பெரிய வீரர் யூசுப் பதான். இந்த ஐபிஎல் தொடரில் விரைவில் சிறப்புமிக்க அற்புத மான ஓர் இன்னிங்ஸை அவர் ஆடுவார் என கொல்கத்தா கேப்டன் கவுதம் கம்பீர் கணித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்வில்ஸை தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இதில் கம்பீர்-பதான் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தது. பதான் 26 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் சேர்த்தார்.
இந்தப் போட்டிக்குப் பிறகு கம்பீர் கூறியதாவது: எப்போதுமே பதான் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறேன். நம்பிக்கை என்பது அவ்வளவு எளிதாகக் குறைந்துவிடாது. யூசுப் பதான் எப்போதுமே எங்கள் அணியின் மேட்ச் வின்னர்தான். இப்போது வரை அவர் பேட் செய்து வரும் விதத்தைப் பார்க்கும்போது அவர் மிகப்பெரிய ஆட்டத்தின் போக்கையும் மாற்றுவார் என நினைக்கிறேன்.
இதேபோல் சுனில் நரேன் மற்றும் மற்ற வீரர்களும் முக்கியமான வீரர்கள் என மக்கள் பேசுகிறார்கள் என்பது தெரியும். ஆனால் சிறப்பான ஓர் இன்னிங்ஸை தரக்கூடியவர் யூசுப் பதான். அவரி டம் இருந்து அப்படியொரு இன்னிங்ஸை விரைவில் எதிர்பார்க்கிறேன் என்றார்.
அங்கித் கேஷ்ரி குடும்பத்துக்கு எங்களால் இயன்றதை செய்வோம்
பீல்டிங்கின்போது சகவீரருடன் நேருக்கு நேர் மோதி உயிரிழந்த பெங்கால் கிரிக்கெட் வீரர் அங்கித் கேஷ்ரியின் மரணம் குறித்துப் பேசிய கம்பீர், “அங்கித் கேஷ்ரியின் குடும்பத்துக்கு எங்களால் இயன்றதை செய்வோம். அங்கித் நம்மோடு இல்லை என்பது வேதனையளிக்கிறது.
அவரை இழந்து அவருடைய குடும்பம் தவிக்கிறது. அவருடைய இழப்பை ஈடுகட்ட முடியாது. நாங்கள் (கொல்கத்தா அணியினர்) அவருடைய குடும்பத்துக்கு ஆதரவாக இருப்போம். எங்களால் இயன்றதை அவருடைய குடும்பத்துக்கு செய்வோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
42 mins ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago