ஐபிஎல்: சிக்ஸர் அடிக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்? - பஞ்சாப் இறுதிச்சுற்று கனவு பலிக்குமா

By செய்திப்பிரிவு

மும்பையில் இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 2-வது தகுதிச்சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாபும் மோதுகின்றன. கடந்த 6 ஐபிஎல் போட்டிகளில் 5 முறை இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய சூப்பர் கிங்ஸ், பஞ்சாபை வீழ்த்தி 6-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவதில் தீவிரமாக உள்ளது.

இந்த சீசனின் பலம் வாய்ந்த அணியான பஞ்சாப், இதுவரை ஒருமுறைகூட இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றதில்லை. அதனால் அந்த குறையை இந்த முறை தீர்க்கும் முனைப்பில் உள்ளது. 2008-ல் அரையிறுதி வரை முன்னேறியதே அந்த அணியின் அதிகபட்ச சாதனையாக உள்ளது.

இந்த சீசனில் இருமுறை சூப்பர் கிங்ஸை வீழ்த்திய ஒரே அணி பஞ்சாப் என்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும். பஞ்சாப் அணி முதல் தகுதிச்சுற்றில் கொல்கத்தாவுக்கு எதிராக செய்த தவறை சரிசெய்யும் பட்சத்தில் சென்னையை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறலாம். சென்னைக்கு எதிரான இரு லீக் ஆட்டங்களிலும் பஞ்சாப் அணி 200 ரன்களுக்கு மேல் குவித்தது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் சூப்பர் கிங்ஸ் அணி மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 174 என்ற வெற்றி இலக்கை எளிதாக விரட்டிப்பிடித்ததால் பஞ்சாபுக்கு எதிராக சிறப்பாக ஆட முயற்சிக்கும். லீக் சுற்றில் தொடர்ச்சியாக 3 தோல்வியை சந்தித்த தோனி தலைமையிலான சூப்பர் கிங்ஸ், கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூரையும், எலிமினேட்டர் சுற்றில் மும்பையையும் வீழ்த்தியது. இதனால் சூப்பர் கிங்ஸ், பஞ்சாபை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்கொள்ளும். சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் அதன் மிகப்பெரிய பலமாக இருந்தாலும், பந்துவீச்சு கவலையளிப்பதாக உள்ளது.

பேட்டிங்கில் டுவைன் ஸ்மித், பிரென்டன் மெக்கல்லம், ரெய்னா, டூ பிளெஸ்ஸி, கேப்டன் தோனி, டேவிட் ஹசி என வலுவான வரிசையைக் கொண்டுள்ளது. ஆனால் பந்துவீச்சு எடுபடவில்லை. பஞ்சாபுக்கு எதிராக பந்துவீச்சு நன்றாக அமையும்பட்சத்தில் ஐபிஎல் போட்டியில் சூப்பர் கிங்ஸ் 6-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் மேக்ஸ்வெல்லை எப்படி சூப்பர் கிங்ஸ் பௌலர்கள் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தும் அவர்களின் வெற்றி வாய்ப்பு அமையும்.

பஞ்சாப் அணியைப் பொறுத்தவரையில் சேவாக், மனன் வோரா, விருத்திமான் சாஹா, மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், கேப்டன் பெய்லி என வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பந்துவீச்சிலும் அந்த அணி பலமாகவே உள்ளது. சந்தீப் சர்மா, ஜான்சன், அக்ஷர் படேல், ரிஷி தவண் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாபின் பந்துவீச்சே இதுவரை பலமானதாக இருந்திருக்கிறது. அந்த அணியின் பௌலர்கள் இதுவரை 93 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்