உலகக் கோப்பை வரலாற்றில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு...

By செய்திப்பிரிவு

உலகக் கோப்பை வரலாற்றில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய கண்டத்தைச் சேராத இரு அணிகள் இறுதிச்சுற்றில் மோதுகின்றன.

1992 முதல் 2011 வரை உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகியவற்றில் ஏதாவது ஓர் அணி விளையாடி வந்திருக்கிறது. 1992 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் ஆனது.

அதைத்தொடர்ந்து 1996 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கை சாம்பியன் ஆனது. 1999 உலகக் கோப்பையில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது.

2003 உலகக் கோப்பையில் இந்தியாவும், 2007 உலகக் கோப்பையில் இலங்கையும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டன.

2011 உலகக் கோப்பையில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இரு அணிகளுமே ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவை. இதில் இந்தியா, இலங்கையை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

ஆனால் இந்த முறை ஆசிய கண்டத்திலிருந்து எந்த அணியும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறவில்லை. போட்டியை நடத்தும் நியூஸிலாந்தும், ஆஸ்திரேலியாவும் இறுதிச்சுற்றில் மோதுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்