பத்திரிகையாளரை திட்டிய விவகாரம் தொடர்பாக இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலிக்கு பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வீரர்கள் அதுபோன்று மோசமாக நடந்து கொள்ள கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு பெர்த் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கோலி, அங்கிருந்து திரும்பும் வழியில் பத்திரிகையாளர் ஒருவரை வாய்க்கு வந்தபடி வசைபாடிய விவகாரத்தால் சர்ச்சைக் குள்ளாகியுள்ளார்.
தன்னையும், தனது காதலியையும் பற்றி செய்தி வெளியிட்டதால் திட்டியதாகக் கூறிய கோலி, அதுபோன்ற செய்தி வெளியிட்டது வேறு ஒருவர் என்று தெரிந்த பின்பு, மற்றொரு பத்திரி கையாளர் மூலம் நடந்த சம்பவத் துக்கு மன்னிப்பு கோரினார்.
முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியிருப்பதாவது: கண்ணாடி முன் நின்று எனக்கு பிரச்சி னையை ஏற்படுத்தக் கூடிய விஷயங்களிலிருந்து மீண்டு வர முயற்சிப்பேன். கிரிக்கெட்டை முன்னெடுத்து செல்வதற்கு வீரர்கள், நிர்வாகிகள், ஊடகங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
லட்சுமண் கூறுகையில், “சம்பந்தப்பட்ட பத்திரிகையாளரை சந்தித்து கோலி மன்னிப்பு கோருவதுதான் சரியான வழியாக இருக்கும். இருவரும் பரஸ்பரமாக பேசி இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago