இன்னொரு ஓவர் கேட்ட மிட்செல் ஸ்டார்க், மறுத்த கிளார்க்

By செய்திப்பிரிவு

நியூசிலாந்துக்கு எதிரான விறுவிறுப்பான போட்டியில் மிட்செல் ஸ்டார்க் தொடர்ச்சியாக 6 ஓவர்கள் வீசினார். 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தினார்.

ஆனால் 6 ஓவர்களுக்குப் பிறகு அவர் கூடுதலாக ஒரு ஓவர் கேட்டுள்ளார். ஆனால், கிளார்க் கொடுக்கவில்லை. ஜான்சனிடம் சென்றார். ஆனால் ஜான்சனுக்கு ஸ்விங் இல்லை. இதனால் நியூசி.யின் நெருக்கடி குறைந்தது. அந்த அணி வெற்றி பெற்றதற்கு கிளார்க்கின் இந்த முடிவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

13-வது ஓவரில் ஸ்டார்க் தனது 6-வது ஓவரை முடிக்கும் போது நியூசிலாந்து அணி 90/4 என்று இருந்தது. 14-வது ஓவரில் கமின்ஸ் 2 ரன்களை மட்டுமே கொடுத்தார். ஸ்கோர் 92/4 என்று இருந்த போது வில்லியம்சன், கோரி ஆண்டர்சன் கிரீசில் இருந்தனர்.

ஆனால், 15-வது ஓவரை ஸ்டார்க்தான் வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜான்சனை கொண்டு வந்தார் கிளார்க். ஆனால் அந்த ஓவரில் ஆண்டர்சன், ஜான்சனை 2 பவுண்டரிகள் ஒரு சிக்சர் அடித்தார். இதில் 2-வது பவுண்டரி ஒரு அதிர்ஷ்ட பவுண்டரி என்பது வேறு விஷயம். அந்த ஓவரில் 16 ரன்களை ஜான்சன் கொடுக்க ஆட்டம் நியூசி. பக்கம் திரும்பியது.

தான் ஒரு ஓவர் கூடுதலாகக் கேட்டதாகக் கூறிய மிட்செல் ஸ்டார்க், “நான் கொஞ்சம் ஏமாற்றமடைந்தேன். ஆனால் கிளார்க், நீண்ட நாளைய நலனுக்காகவே இதனைச் செய்தார். நான் கேப்டன் அல்ல. எனவே இடைவெளி கொடு என்று கேப்டன் கூறும்போது நான் பவுலிங் வீச முடியாது, இல்லையென்றால் நான் வீசிக்கொண்டேயிருந்திருப்பேன். இன்னொரு ஓவர் கேட்டேன், ஆனால் கிளார்க் ஒரு அபூர்வமான, அசாத்தியமான கேப்டன், ஆகவே அவர் எடுக்கும் எந்த முடிவையும் நான் முழுமனதோடு ஆதரிக்கிறேன்.” என்றார்.

நேற்று 28 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் மிட்செல் ஸ்டார்க்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்