போட்டியில் வெல்வதற்காக சகலவிதமான உத்திகளை யும் பயன்படுத்தத் தயங்கா தவர்கள் ஆஸ்திரேலியர்கள். களத் திலும், களத்துக்கு வெளியேயும் எதிரணியைச் சீண்டுவதிலும் மனோரீதியாக நெருக்கடி கொடுப் பதிலும் கைதேர்ந்தவர்கள்.
வரும் 26-ம் தேதி அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்ள இருக்கிறது ஆஸ்திரேலியா. இப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தொடரில் இதுவரை தோல் வியே அடையாமல் அரையிறுதி யை எட்டியுள்ளது இந்தியா. ஆஸ்திரேலியா லீக் சுற்றில் நியூஸிலாந்திடம் மட்டும் தோல்வி யடைந்துள்ளது.
உலகக் கோப்பை தொடருக்கு முன் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் இந்தியாவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி யானதாக இல்லை. எனவே, இப் போட்டியில் இந்தியா ஆக்ரோஷமான பதிலடியைக் கொடுக்கக் கூடும்.
இத்தொடரில் நியூஸிலாந்தைத் தவிர மற்ற அணிகளின் அனைத்து விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலியா கைப்பற்றியிருக்கிறது.
இந்தியா அனைத்துப் போட்டி களிலும் எதிரணியின் மொத்த விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக் கிறது. ஆக, இரு அணிகளுமே ஏறக் குறைய சமநிலையில்தான் உள்ளன. சொந்த மண்ணில் விளை யாடுவது வேண்டுமானால் ஆஸ்திரே லியாவுக்கு கூடுதல் பலமாக இருக் கலாம். ஆனால், அதுவே நெருக் கடியும் கூட.
சுழலுக்கு சாதகம்
போட்டி நடக்கவிருக்கும் சிட்னி ஆடுகளம் சுழலுக்கு சாதக மானது. மற்ற ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும். ஆனால், சிட்னி சுழலுக்கு ஒத்துழைக்கும். இந்த ஆடுகளத்தின் பராமரிப்பாளர் டாம் பார்க்கர், மைதானத்தை வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும்படி மாற்ற வேண்டும் என ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேஸில் வுட் வெளிப்படையாகவே கோரி யிருக்கிறார்.
“டெஸ்ட் போட்டிகளின்போது பார்க்கர் எங்களுக்கு சாதகமாக பிட்ச் அமைக்கவில்லை. அரையிறுதிப் போட்டியிலாவது வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற பிட்ச் அமைக்க வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.
மைக்கேல் கிளார்க்கும் வேகப் பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச் அமைக்கும் கோரிக்கையை வைக்க, டாம் பார்க்கர் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய சுழற் பந்து வீச்சை எதிர்கொள்வது உள்ளூர அவர்களைக் கவலை கொள்ளச் செய்தி ருக்கிறது. அதற்காகவே மைதா னத்தின் தன்மையை மாற்றும்படி கேப்டன் உட்பட பலரும் வேண்டுகோள் விடுக்கின்றனர். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்பதால் மன ரீதியான தாக்கு தலைத் தொடங்கியிருக்கிறது ஆஸ்திரேலியா.
தோல்வி நினைவிலிருக்கும்
ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல், “எங்களுக்கு எதிராகப் பெற்ற தொடர் தோல்விகள் இந்தி யாவுக்கு நினைவில் இருக்கும். ஒரு போட்டியில் கூட எங்களை வெல்லவில்லை. எனவே, அந்தத் தோல்விகளை அவர்கள் மறந்திருக்கமாட்டார்கள். அதே நிலையைத் தொடர நாங்கள் விரும்புகிறோம்.
இந்தியாவை வீழ்த்த புதிய திட்டமெல்லாம் தேவையில்லை. டெஸ்ட் தொடரிலும், முத்தரப்பு தொடரிலும் இந்தியாவை வென் றதைப் போலவே வெல்வோம். அஸ்வின், ஜடஜோ பந்துகளை சாதாரணமாகவே எதிர்கொள் வோம். இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியை பெரிய போட்டியாக பலரும் சொல்கிறார்கள். அப்படி யெல்லாம் இல்லை” எனக் கூறி யுள்ளார்.
வரும் வியாழக்கிழமை போட்டி நடைபெறவுள்ளது. அதற்குள் இன்னும் என்னென்ன தந்திரங்களை கையாளுமோ ஆஸ்திரேலியா.
ஸ்டீவ் வா கருத்து
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வா, இதேபோன்ற கருத்தைக் கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவுடனான போட்டி என்பது இந்தியாவுக்கு மனரீதியாக சவாலாக இருக்கும். அண்மையில் இந்தியாவை ஆஸ்திரேலியா தொடர்ந்து தோற்கடித்திருக்கிறது. அரையிறுதிப் போட்டிக்காகத் தயாராகிக் கொண்டிருக்கும் இந்திய வீரர்களை அந்தத் தொடர் தோல்விகள் மன ரீதியாக அச்சுறுத்தும். இரு அணிகளும் நம்பிக்கையாக உணர்ந்தாலும், போட்டியில் அதைக் காட்டாவிட்டால் சறுக்கிவிடும் எனத் தெரிவித்துள்ளார் ஸ்டீவ் வா.
ஜோ டேவ்ஸ், இந்திய முன்னாள் பந்து வீச்சு பயிற்சியாளர்:
சுற்றுப்பயண தோல்வியிலிருந்து மீண்டு, ஆஸ்திரேலியா மீது ஆதிக்கம் செலுத்த பாகிஸ்தானின் வகாப் ரியாஸ் போல பந்து வீசி தாக்குதல் தொடுக்க இந்தியா முயற்சி செய்யும். ஆனால், அதில் அவர்களுக்கு சற்று சிரமம் ஏற்படும்.
ஜோ டேவ்ஸ்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago