ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய பந்துவீச்சாளர்கள் அஸ்வின், ஷமி ஆகியோர் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளனர்.
அதேவேளையில், இந்திய கேப்டன் தோனியும் துணைக் கேப்டன் விராட் கோலியும் சற்றே பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.
ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சாளர் தரவரிசைப் பட்டியலில், அஸ்வின் 6 இடங்கள் முன்னேற்றம் கண்டு 16-வது இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் இவர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பது, இந்த முன்னேற்றத்துக்கு வகை செய்துள்ளது.
உலகக் கோப்பையில் சிறப்பாக பந்துவீசி வரும் முகமது ஷமி 14 இடங்கள் முன்னேற்றம் கண்டு 11-வது இடத்தை அடைந்துள்ளார்.
பாகிஸ்தான் ஸ்பின்னர் சயீத் அஜ்மல் பவுலிங் தரவரிசையில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
பேட்டிங்கில் சற்றே பின்னடைவு கண்டுள்ள விராட் கோலி ஓர் இடம் பின்தங்கி 4-ம் இடத்திலும், தோனி இரண்டு இடங்கள் பின்னடவைச் சந்தித்து 10-ம் இடத்திலும் உள்ளனர். ஷிகர் தவண் தொடர்ந்து 7-வது இடத்தில் நீடிக்கிறார்.
பேட்டிங் தரவரிசையில் தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் முதலிடத்திலும், இலங்கையின் சங்ககாரா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஆம்லா ஆகியோர் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் தொடர்ந்து 7-வது இடத்தில் நீடிக்கிறார்.
ஒருநாள் போட்டிகளின் தரவரிசையில், ஆஸ்திரேலியா (120 புள்ளிகள்) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. அந்த அணியை விட 4 புள்ளிகள் குறைவாக உள்ள இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா மூன்றாம் இடத்திலும், இலங்கை 4-ம் இடத்திலும் உள்ளன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago