கான்பெராவில் நடைபெற்ற உலகக்கோப்பை பி-பிரிவு ஆட்டத்தில் அயர்லாந்து அணியை தென்னாப்பிரிக்கா 201 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
412 ரன்கள் என்ற இமாலய இலக்கை எதிர்த்துக் களமிறங்கிய அயர்லாந்து 45 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அயர்லாந்து அணியில் பால்பர்னி அதிகபட்சமாக 58 ரன்களையும், அடுத்தபடியாக அதிரடி வீரர் கெவின் ஓ ப்ரையன் 48 ரன்களையும் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்க அணியில் கைல் அபாட் 8 ஓவர்கள் வீசி 21 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மோர்கெல் 3 விக்கெட்டுகளையும் டேல் ஸ்டெய்ன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். கேப்டன் ஏ.பி.டிவில்லியர்ஸ் அதிசயமாக 2 ஓவர்கள் பந்து வீசி 7 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். அவர் பந்தில் மூனி பவுல்டு ஆனார்.
அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இம்ரான் தாஹிர் 10 ஓவர்களில் 50 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கூட கைப்பற்றாமல் முடிந்தார்.
முதல் முறையாக ஒரே தொடரில் 2 முறை 200 ரன்களுக்கும் மேலான இடைவெளியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. அதே போல் அடுத்தடுத்து 400க்கும் மேல் ரன்கள் எடுத்தும் ஒரு சாதனையை நிகழ்த்தியது தென்னாப்பிரிக்கா.
10 ரன்களில் ஆம்லாவுக்கு நழுவவிட்ட கேட்ச் :
தொடக்கத்தில் வீசும் கை விக்கெட்டிலிருந்து விலகி வர, ஸ்டம்ப்களிலிருந்து விலகிச் சென்று பக்கவாட்டு கிரீஸ் அருகில் சென்று அபாரமான இன்ஸ்விங்கர்களையும், பிறகு அதே அளவில் பந்தை லேசாக வெளியே கொண்டு சென்றும் அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் மூனி நன்றாக வீசிவந்தார். அவர் 2 மைடன்களை தொடகத்தில் வீசி டி காக் விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தார்.
இந்நிலையில் ஆட்டத்தின் 6-வது ஓவரை ஆல்ரவுண்டர் கெவின் ஓ ப்ரையன் வீச வந்தார். ஆம்லா அப்போது 10 ரன்களில் இருந்தார். பந்து லெக் திசை பந்து. ஆம்லா பிளிக் செய்தார். பந்து நேராக ஷார்ட் மிட்விக்கெட்டில் அனுபவமிக்க எட் ஜாய்சிடம் கேட்சாகச் செல்ல அவர் அதனை நழுவ விட்டார். அதன் பிறகுஆம்லா 159 ரன்களை விளாசினார். டு பிளேசியும் அவரும் இணைந்து 247 ரன்களை 2-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ஒரு நேரதில் இருவரும் இரட்டைச் சதம் அடிக்க அதிக வாய்ப்புகள் இருந்தன.
அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் சோரன்சென் படுமோசமாக வீசி 6 ஓவர்களில் 76 ரன்களைக் கொடுத்தார். டிவில்லியர்ஸ் 24 ரன்களில் ஆட்டமிழக்கவில்லையெனில் இன்று ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையை தென்னாப்பிரிக்கா நிகழ்த்தியிருக்கும். அந்தவகையில் அயர்லாந்து பிழைத்தது.
412 ரன்கள் இலக்கை எதிர்த்து களமிறங்கிய அயர்லாந்து முதல் 10.2 ஓவர்களில் 48 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இதில் கைல் அபாட் 3 விக்கெட்டுக்ள், ஸ்டெய்ன் 2 விக்கெட்டுகள்.
அதன் பிறகு பால்பர்னி, கெவின் ஓ ப்ரையன் ஆடி அயர்லாந்தை ஓரளவுக்கு கேவலமான தோல்வியிலிருந்து காத்தனர் என்றே கூற வேண்டும்.
ஆம்லா, ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஆம்லா, டூ ப்ளெஸ்ஸியின் சதங்கள்
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயம் செய்யப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 411 ரன்களைக் குவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவின் டூ ப்ளெஸ்ஸி மற்றும் ஆம்லா சதமடித்தனர்.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த தென் ஆப்பிரிக்க அணியின் துவக்க வீரர் டி காக், 2-வது ஓவரில் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதன் பிறகு ஜோடி சேர்ந்த டூ ப்ளெஸ்ஸி மற்றும் ஆம்லா இணை பொறுமையாகவே ஆடியது. இருவரும் அதிரடியாக ரன் சேர்க்கவில்லை என்றாலும் நிலைத்து ஆடி சீராக ரன் சேர்த்தனர்.
ஓவருக்கு 6 ரன்களுக்கு குறையாமல் வர 35-வது ஓவருக்கு மேல், பேட்டிங் பவர்ப்ளேவைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க வீரர்கள் தங்கள் அதிரடியை ஆரம்பித்தனர். ஆம்லா 100 பந்துகளில் சதத்தை எட்டினார். டூ ப்ளெஸ்ஸி 109 பந்துகளில் சதத்தை எட்டினார். 39-வது ஓவரில் ப்ளெஸ்ஸி 109 ரன்களுக்கும், சில ஓவர்கள் கழித்து ஆம்லா 159 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
அதிகம் எதிர்பார்ப்புகளை உருவாக்கிய டி வில்லியர்ஸ் 24 ரன்களை மட்டுமே சேர்த்தார். ஆனால் அடுத்து களத்தில் இணைந்த மில்லர், ரூஸாவ் ஜோடி அயர்லாந்து பந்துவீச்சை மைதானத்தின் அத்தனை எல்லைகளுக்கும் விரட்டியடித்தது.
முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்களை தென் ஆப்பிரிக்கா குவித்தது. மில்லர் 23 பந்துகளில் 46 ரன்களும், ரூஸாவ் 30 பந்துகளில் 61 ரன்களும் எடுத்திருந்தனர். கடைசி 51 பந்துகளில் 110 ரன்கள் சேர்க்கப்பட்டன. முன்னதாக, ஆம்லா - ப்ளெஸ்ஸி ஜோடி பார்ட்னர்ஷிப்பில் 247 ரன்களைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago