சென்னை லீக் சீனியர் டிவிசன் கால்பந்து போட்டியில் இந்திய உணவுக்கழக (எப்சிஐ) அணி 1-0 என்ற கோல் கணக்கில் தமிழ் நாடு காவல்துறை அணியைத் தோற்கடித்தது. 4 தோல்விகளுக்குப் பிறகு முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது எப்சிஐ.
சென்னை நேரு மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழக காவல் துறை அணியின் ஆட் டம் சொல்லிக்கொள்ளும் அள வில் இல்லாமல் போனது. எப்சிஐ அணியும் அபாரமாக ஆட வில்லை என்றாலும், அவ்வப் போது சில கோல் வாய்ப்புகளை உருவாக்கியது. ஆட்டம் தொடங் கிய சில நிமிடங்களிலேயே கோல் வாய்ப்பை கோட்டைவிட்ட எப்சிஐ லெப்ட் விங்கர் அலெக்சாண்டர் அஜன், பின்னர் இடதுபுறத்தில் இருந்து அசத்தலான ‘கிராஸ்’ ஒன்றை கொடுத்தார். ஆனால் அதை ஸ்டிரைக்கர் ஜான் பால் வீண டித்தார். அடுத்த சில நிமிடங்களில் ஜான் பாலுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்க, அதையும் கோட்டைவிட்டார். இதனால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் எப்சிஐ மட்டும்தான் கோல் வாய்ப்பை உருவாக்கியது. தமிழ்நாடு காவல் அணியிடம் எந்த முன்னேற்றத்தையும் காணமுடிய வில்லை. 63-வது நிமிடத்தில் லெப்ட் விங்கர் அலெக்சாண்டர் கிராஸ் செய்த பந்தை, ரைட் விங் கர் அருண் கோலாக்க, அதுவே வெற்றி கோலாக அமைந்தது.
நடுவர்களை திட்டித்தீர்த்த மத்திய உற்பத்தி வரித்துறை அணி
முதல் டிவிசன் லீக் போட்டியில் வருமான வரித்துறை அணி 3-2 என்ற கோல் கணக்கில் மத்திய உற்பத்தி வரித்துறை அணியைத் தோற்கடித்தது. கடைசி நிமிடத்தில் மத்திய உற்பத்தி வரித்துறை கோலடித்தபோது, அதை நடுவர் ‘ஆப்சைடு’ கோல் என அறிவித்தார்.
இதையடுத்து கடும் கோபமடைந்த உற்பத்தி வரித்துறை அணியினர் நடுவர்களையும், அவர்களின் கமிஷனரையும் மிக மோசமாக திட்டித்தீர்த்ததோடு, 3 நடுவர்களையும் சஸ்பென்ட் செய்யுமாறு வாக்குவாதம் செய்தனர். அந்த அணியின் வீரர் பாபு, நடுவர்களுக்கு எதிராக மிக மிக தரக்குறைவான வார்த்தைகளை உபயோகித்தது மைதானத்தில் இருந்த அனைவரையும் முகம் சுளிக்கவைத்தது.
கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் உயர் தொழில்நுட்பங்கள் இருந்தும்கூட, சில நேரங்களில் தவறான தீர்ப்புகளுக்கு வீரர்கள் பலிகடாவாகின்றனர். நடுவர்களுக்கு உதவியாக உயர் தொழில்நுட்ப வசதிகள் இருந்தே தவறு நடக்கும்போது, தொழில்நுட்ப உதவி இல்லாமல் சென்னை லீக்கில் பணிபுரியும் நடுவர்கள், எப்படி 100 சதவீதம் துல்லியமான தீர்ப்பு வழங்கிவிட முடியும்.
சரியோ, தவறோ நடுவரின் முடிவுதான் இறுதியானது என்பதை மத்திய உற்பத்தி வரித்துறை அணி மட்டுமல்ல, அனைத்து அணிகளும் ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு மாறவேண்டும். எந்தவொரு நடுவரும் வேண்டுமென்றே தவறு செய்வதில்லை. அதேநேரத்தில் ஒரு நடுவர் தொடர்ந்து தவறு செய்தால் அவர் அந்தப் பணிக்கு பொருத்தமானவர் அல்ல என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. நடுவர் தவறு செய்ததற்காக அவரை சஸ்பென்ட் செய்ய வேண்டும் என்கிறார்கள் மத்திய உற்பத்தி வரித்துறை அணியினர். தவறு செய்த நடுவருக்கு தண்டனை சஸ்பென்ட் என்றால், மோசமான வார்த்தைகளை உபயோகித்ததோடு மட்டுமல்லாமல், அநாகரீகமாக நடந்து கொண்ட மத்திய உற்பத்தி வரித்துறை அணியினருக்கு என்ன தண்டனை கொடுப்பது?
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago