இலங்கைக்கு எதிராக மேக்ஸ்வெல் அதிரடி சதம்: ஆஸ்திரேலியா 376 ரன்கள் குவிப்பு

By செய்திப்பிரிவு

உலகக் கோப்பை ஏ - பிரிவு லீக் ஆட்டத்தில், இலங்கை அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 376 ரன்கள் குவித்தது.

இதன்மூலம், 377 ரன்கள் என்ற மிகப் பெரிய இலக்கை இலங்கைக்கு ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்தது.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியின் ரன் குவிப்புக்கு மேக்ஸ்வெல் விளாசிய அபார சதம் உறுதுணை புரிந்தது.

அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ஃபின்ச் 24 ரன்களிலும், வார்னர் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர், பொறுப்புடன் பேட் செய்த ஸ்மித் - கிளார்க் கூட்டணி அணிக்கு வலுவான ஸ்கோருக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. ஸ்மித் 72 ரன்களும், கிளார்க் 68 ரன்களும் சேர்த்தனர்.

மேக்ஸ்வெல் மிகச் சிறப்பாக பேட் செய்து அபார சதம் அடித்தார். அவர் 53 பந்துகளில் 102 ரன்கள் விளாசினார். அவருக்கு பக்க பலமாக இருந்த வாட்சன் 41 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்தார். ஹிதீன் 25 ரன்கள் எடுத்தார்.

இலங்கை தரப்பில் மலிங்கா, பரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மேத்யூஸ், பிரசன்னா மற்றும் தில்ஷன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்