உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 39-வது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயைத் தோற்கடித்தது இந்தியா. இதன்மூலம் 6-வது வெற்றியைப் பதிவு செய்த இந்தியா, லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காத அணி என்ற பெருமையையும் பெற்றது.
இந்தியா தனது காலிறுதியில் வங்க தேசத்தை சந்திக்கிறது. இந்த ஆட்டம் வரும் 19-ம் தேதி மெல்போர்னில் நடைபெறுகிறது.
தொடர்ச்சியாக 10-வது வெற்றி
ஜிம்பாப்வேயை தோற்கடித்ததன் மூலம் உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 10-வது வெற்றியைப் (கடந்த உலகக் கோப்பையில் வென்றிருந்த 4 ஆட்டங்களையும் சேர்த்து) பதிவு செய்துள்ளது மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி.
இதன்மூலம் உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பெற்றிருந்த அணிகள் வரிசையில் 2-வது இடத்தில் இருந்த கிளைவ் லாயிட் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகளை (9 வெற்றிகள்) பின்னுக்குத்தள்ளி 2-வது இடத்தைப் பிடித்துள்ளது தோனி தலைமையிலான இந்திய அணி.
உலகக் கோப்பையில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 2003 முதல் 2011 வரையில் தொடர்ச்சியாக 24 ஆட்டங்களில் வென்றதே இன்றளவும் சாதனையாக உள்ளது.
விடை பெற்றார் பிரென்டன் டெய்லர்
ஜிம்பாப்வே கேப்டன் சிகும்பரா காயம் காரணமாக விளையாடாததால் அவருக்குப் பதிலாக அணியை வழிநடத்திய பிரென்டன் டெய்லருக்கு இந்தியாவுடனான ஆட்டம் கடைசி ஆட்டமாகும். அவர் கவுன்டி போட்டியில் விளையாட 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளதால் ஜிம்பாப்வேக்காக விளையாட முடியாது.
2004-ல் இலங்கைக்கு எதிராக அறிமுகமானபோது டக் அவுட்டான டெய்லர், தனது கடைசி ஆட்டத்தில் சதமடித்த திருப்தியோடு விடை பெற்றிருக்கிறார். ஆனால் கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற முடியாமல் போனது அவருக்கு ஏமாற்றமாக அமைந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago