சென்னை லீக் கால்பந்து: ஸ்டெஜின் கோலில் இந்தியன் வங்கிக்கு 3-வது வெற்றி

By ஏ.வி.பெருமாள்

சென்னை லீக் சீனியர் டிவிசன் கால்பந்து போட்டியில் இந்தியன் வங்கி 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய உணவுக் கழக (எப்சிஐ) அணியைத் தோற்கடித்தது. இதன் மூலம் 3-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது இந்தியன் வங்கி.

எப்சிஐ அணி தான் விளை யாடிய 3 ஆட்டங்களிலும் தோற்றிருந்தாலும்கூட, இந்தியன் வங்கியுடன் கடுமையாகப் போராடியே தோற்றது. அந்த அணியின் ஆட்டத்தில் நல்ல முன்னேற்றம் இருந்ததைக் காண முடிந்தது. அந்த அணியின் கோல் கீப்பர் மணிகண்டன் இந்தியன் வங்கியின் இரு கோல்களை அசத்தலாக முறியடித்தார். இல்லையெனில் அந்த அணி 3 கோல்கள் அடித்திருக்கும்.

செயின்ட் ஜோசப்-சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சென்னை லீக் கால்பந்து போட்டிகள் சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற போட்டியில் இந்தியன் வங்கியும், இந்திய உணவுக்கழக அணியும் மோதின.

எப்சிஐ முன்னேற்றம்

வலுவான அணியான இந்தியன் வங்கி வழக்கம்போல் இந்த ஆட்டத்திலும் பின்களம், நடுகளம், முன்களம் என அனைத்திலும் சிறப்பாக ஆட, எப்சிஐயின் பின்கள வீரர்களும், நடுகள வீரர்களும் அவர்களுக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் அபாரமாக ஆடினர். அதேநேரத்தில் எப்சிஐ அணியின் ஸ்டிரைக்கர்கள் ரவீந்திரன், மாருதி பாண்டே ஆகியோர் ஒருங்கிணைந்து ஆடவில்லை. இதனால் மிட்பீல்டர்கள் பெலிக்ஸ் நிக்ஸான், செந்தில்குமார் ஆகியோர் உருவாக்கி கொடுத்த கோல் வாய்ப்புகளை ஸ்டிரைக்கர்களால் கோலாக்க முடியவில்லை.

மணிகண்டன் அபாரம்

இந்தியன் வங்கியின் மிஜோ ஜோஸ் அடித்த இரு பந்துகள் நூலிழையில் கோலாவதில் இருந்து தப்பின. முதலில் 25 யார்ட் தூரத்தில் இருந்து அவர் அடித்த பந்தை எப்சிஐ கோல் கீப்பர் மணிகண்டன் முறியடித்தார். பின்னர் கிடைத் த ப்ரீ கிக் வாய்ப்பில் 35 யார்ட் தூரத்தில் இருந்து மிஜோ நேரடி யாக கோல் கம்பத்தை நோக்கி பந்தையடித்தார். ஆனால் எப்சிஐ கோல் கீப்பர் அற்புதமாக பந்தை மேல் நோக்கி தட்டிவிட, அது கோல் கம்பத்துக்கு மேலே பறந்தது.

இதன்பிறகு இந்தியன் வங்கிக்கு மற்றொரு ப்ரீ ஹிக் வாய்ப்பு கிடைக்க, அதில் பந்தை கிக் செய்த சதீஷ்குமார், துல்லியமாக கோல் கம்பத்துக்கு அடித்தார். அது கோலாகும் என எல்லோரும் எதிர்பார்த்த வேளையில், கோல் கீப்பர் மணிகண்டன் அசத்தலாக ஒரு ‘ஜம்ப்’ செய்து ஒரு கையால் பந்தை தட்டிவிட, பந்து கோல் கம்பத்துக்கு மேலே சென்றது. நூலிழையில் கோல் நழுவியது. இதனால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.

சரியானது சபீரின் கணிப்பு

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணியில் ஸ்டிரைக்கர் கௌரி தாசனுக்குப் பதிலாக ஸ்டெஜின் களமிறக்கப்பட்டார். பயிற்சியாளர் சபீர் பாஷாவின் அந்த மாற்றத்துக்கு பலனும் கிடைத்தது. ஐசிஎப் வீரர் சங்கர், இந்தியன் வங்கி ஸ்டிரைக்கர் ஜானை கீழே தள்ள, ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது.

இதில் அந்த அணியின் மிட்பீல்டர் சதீஷ்குமார் கிக் செய்ய, அது மற்றொரு வீரரின் காலில் பட்டு, எட்வினிடம் சென்றது. அவர் அதை கோல் கீப்பரை நோக்கி அடிக்க, அவருடைய கையில் பட்ட பந்து அருகிலேயே விழுந்தது. அப்போது ஸ்டெஜின் கண் இமைக்கும் நேரத்தில் கோலடித்தார். 57-வது நிமிடத்தில் இந்த கோல் கிடைத்தது.

இதன்பிறகு இந்தியன் வங்கி அணியில் மிஜோவுக்குப் பதிலாக மதுகண்ணன் களமிறக்கப்பட்டார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. இந்தியன் வங்கி வீரர்கள் ஒரு சில கோல் வாய்ப்புகளை உருவாக் கினாலும்கூட, அவர்களால் அதை கோலாக்க முடியவில்லை. அதேநேரத்தில் எப்சிஐ அவ்வப் போது வீரர்களை மாற்றிக் கொண்டே இருந்தாலும், அதற்கு பலன் கிடைக்கவில்லை.

டி சில்வா ஆட்டநாயகன்

இந்தியன் வங்கியின் பின்கள வீரர்கள் வேயன் டி சில்வா, பெஸ்கி ஆகியோரைத் தாண்டி எப்சிஐ வீரர்களால் முன்னேற முடியவில்லை. குறிப்பாக டி சில்வாவை சமாளிக்க அவர்கள் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. இறுதியில் இந்தியன் வங்கி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

அபாரமாக ஆடிய இந்தியன் வங்கி தடுப்பாட்டக்காரர் டி சில்வா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஸ்போர்ட்டிங் யூனிட் வெற்றி

முன்னதாக நடைபெற்ற முதல் டிவிசன் போட்டியில் மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனிட் அணி 5-1 என்ற கோல் கணக்கில் மெட்ராஸ் யூத் பெஸ்டிவல் அணியைத் தோற்கடித்தது. ஸ்போர்ட்டிங் வீரர் தும்பியா மமாடு ஹாட்ரிக் கோல்களை அடித்தார்.

இன்றைய ஆட்டங்கள்

முதல் டிவிசன் - எஸ்.சி.ஸ்டெட்ஸ் - சேலஞ்சர்ஸ் யூனியன்

நேரம்: பிற்பகல் 2.15

சீனியர் டிவிசன் - தெற்கு ரயில்வே-ஆர்பிஐ

நேரம்: மாலை 4.15

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்