சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் ஸ்ரீகாந்த் 17-21, 21-14, 21-19 என்ற செட் கணக்கில் சர்வதேச தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள ஹாங்காங்கின் ஹன் யூவைத் தோற்கடித்தார். ஸ்ரீகாந்த் தனது அரையிறுதியில் உலகின் முதல் நிலை வீரரான மலேசியாவின் லீ சாங் வெய்யை சந்திக்கிறார்.
அதேநேரத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, இந்திய வீரர் சாய் பிரணீத் ஆகியோர் காலிறுதியில் தோல்வி கண்டனர். சிந்து 19-21, 15-21 என்ற நேர் செட்களில் சீனாவின் இகன் வாங்கிடமும், சாய் பிரணீத் 15-21, 15-21 என்ற நேர் செட்களில் சீனாவின் டூ பெங்குவிடமும் தோல்வி கண்டனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago