உலகக்கோப்பையை வெல்வதை நோக்கி இந்திய அணி சென்று கொண்டிருக்கிறது என்கிறார் இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி.
தொடர்ச்சியாக 5 வெற்றிகளை நடப்பு உலகக்கோப்பையில் பெற்றுள்ள இந்திய அணி கோப்பையை வெல்லும் கணம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
"இப்போதுள்ள இந்திய அணியின் ஆட்டத்திறன் படி நல்ல நிலையில் உள்ளோம். ஒவ்வொரு போட்டியையும் நாக்-அவுட் போட்டியாகவே அணுகினோம். வெற்றிபெறத் தொடங்கிவிட்டால், மகிழ்ச்சி வர, களைப்பு நீங்கி விடும். தோற்கும்போது தான் ஓய்வறையில் அடைபட்டுக் கிடப்போம். இப்போதைக்கு இந்திய அணியினர் ஒரு மகிழ்ச்சிகரமான குழுவாக இருந்து வருகின்றனர். கால்பந்து விளையாடுகின்றனர், உற்சாகமாகத் திகழ்கின்றனர்.
எண்ணிக்கைகளை பூர்த்தி செய்ய நாம் இங்கு வரவில்லை. எந்த ஒரு எதிரணியினருக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் அளிக்கப்போவதில்லை. உலகக்கோப்பையை வெல்லப் போகிறோம்.” என்றார்.
இவரது கருத்தை எதிரொலித்த சுனில் கவாஸ்கர், “பந்துவீச்சாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்துப் பாராட்டுகளுக்கும் அவர்கள் உரித்தானவர்களே. இது சிறந்த சாதனையாகும். நிறைய தருணங்களில் பவுலர்களின் திறமை மீது பேட்ஸ்மென்களின் திறமை என்ற நிழல் படிந்து விடுகிறது. இப்போது பேட்ஸ்மென்களுக்கு புகழ் சென்றடையாது.
பவுலர்களுக்கு புகழாரம் குவிந்து வருவது மகிழ்ச்சியான விஷயம்.” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago