துபாய் ஓபன்- ஏடிபி டென்னிஸ் போட்டியில் சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் சாம்பியன் பட்டம் வென்றார்.
துபாயில் சனிக்கிழமை நடைபெற்ற துபாய் ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தரவரிசையில் 2-வது இடத்திலுள்ள சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை எதிர்கொண்டார்.
இரு முன்னணி வீரர்கள் மோதிய போட்டி என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. போட்டியின் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிகள் கணக்கில் ஃபெடரர் கைப்பற்றினார்.
2-வது செட்டில் அனல் பறந்தது. டைபிரேக்கர் வரை சென்ற 2-வது செட்டிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபெடரர் 7-5 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று, தனது 7-வது துபாய் ஓபன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
இப்போட்டியில் 12 ஏஸ்களை விளாசிய ஃபெடரர், இதுவரை 9,000 ஏஸ்களை விளாசியவர் என்ற பெருமையைப் பெற்றார்.
கடந்த 1991-ம் ஆண்டிலிருந்து இதுவரை 4 பேர் மட்டுமே இச்சாதனையைப் புரிந்துள்ளனர். ஜோகோவிச் இப்போட்டியில் வென்றிருந்தால் அது இவருக்கு 50-வது பட்டமாக இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago