ஜிம்பாப்வே அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இன்று 196 ரன்கள் வெற்றிக் கூட்டணி அமைத்த ரெய்னா, தோனி கூட்டணி நிறைய முறை இப்படி வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ளனர்.
சில புள்ளி விவரங்கள் இதோ:
ரெய்னாவும், தோனியும் இணைந்து ஒருநாள் போட்டிகளில் 66 முறை கூட்டணி படைத்துள்ளனர்.
9 முறை சதக்கூட்டணி அமைத்துள்ளனர். 17 அரைசதக் கூட்டணியும் அமைத்துள்ளனர்.
கூட்டணி சராசரி 62.14. ஹஷிம் ஆம்லா, டிவில்லியர்ஸ் இது வரை 35 முறை கூட்டணி சேர்ந்து ஆடியுள்ளனர். சராசரி 81.96 என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று தோனியும், ரெய்னாவும் ஆட்டமிழக்காமல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்த 196 ரன்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் 6-வது சிறந்த ஜோடி சேர்ப்பு ரன் எண்ணிக்கையாகும்.
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் நம்பர் 1 கூட்டணி ரன்களுக்கான சாதனையை திராவிட்-கங்குலி (318 ரன்கள்) வைத்துள்ளனர். இவர்களுக்கு அடுத்த இடத்தில் கங்குலி-டெண்டுல்கர் (244), திராவிட்-சச்சின் (237), கோலி-சேவாக் (203), கங்குலி-சேவாக் (202) ஆகியோரது கூட்டணிகள் உள்ளன. 6-வது இடத்தில் தோனி, ரெய்னா (196).
இதற்கு முந்தைய அயர்லாந்து போட்டியில் ஷிகர் தவன், ரோஹித் சர்மா சேர்த்த 174 ரன்களே நடப்பு உலகக்கோப்பையில் அதிகபட்ச இந்திய ஜோடி சேர்ப்பு ரன்களாக இருந்தது. அதனை இன்று ரெய்னா, தோனி முறியடித்தனர்.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 5-வது விக்கெட்டுக்காக தோனியும், ரெய்னாவும் இன்று சேர்த்த 196 ரன்கள் என்பது 5-வது இடத்தில் உள்ளது. இதே ஜிம்பாப்வேவுக்கு எதிராக இந்த உலகக்கோப்பை போட்டித் தொடரில் தென்னாப்பிரிக்காவின் மில்லர், டுமினி ஜோடி சேர்ந்து எடுத்த 256 ரன்களே சிறந்த 5-வது விக்கெட்டுக்கான அதிகபட்ச ரன் சேர்ப்பாகும். இது முதலிடத்தில் உள்ளது.
அசாருதீன், ஜடேஜா இணைந்து 5-வது விக்கெட்டுக்காக 1997-ல் இலங்கைக்கு எதிராக எடுத்த 223 ரன்கள் 3ஆம் இடத்தில் உள்ளது.
கம்பீரும், தோனியும் பிப்ரவரி 2008-இல் பிரிஸ்பன் மைதானத்தில் இலங்கைக்கு எதிராக இதே 5-வது விக்கெட்டுக்காக 184 ரன்களை ஆட்டமிழக்காமல் சேர்த்துள்ளனர்.
இதற்கு முன்பாக ரெய்னா, தோனி கூட்டணி 2011ஆம் ஆண்டு லார்ட்ஸில் 169 ரன்களை சேர்த்திருந்தனர். இன்று இதே விக்கெட்டுக்காக இவர்களது ரன் சேர்ப்பை கடந்துள்ளனர்.
தோனி, ரெய்னா இதே 5-வது விக்கெட்டுக்காக இணைந்து 2014-ல் கார்டிப்பில் 144 ரன்களைச் சேர்த்துள்ளனர்.
2009ஆம் ஆண்டும் நாக்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோனி, ரெய்னா ஜோடி சேர்ந்து 5-வது விக்கெட்டுக்காக 136 ரன்களைச் சேர்த்துள்ளனர்.
தோனியும், ரோஹித் சர்மாவும் 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் 167 ரன்களை இதே 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்துள்ளனர்.
விராட் கோலியும் சுரேஷ் ரெய்னாவும் இணைந்து 5-வது விக்கெட்டுக்காக 2012ஆம் ஆண்டு கொழும்புவில் ஆட்டமிழக்காமல் 146 ரன்களைச் சேர்த்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago