நட்சத்திர நாயகனான ஆப்கன் வீரர் சமியுல்லா ஷென்வாரி

By செய்திப்பிரிவு

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று ஸ்காட்லாந்தை வீழ்த்த நம்ப முடியாத இன்னிங்ஸை ஆடிய ஷென்வாரி ‘நான் என் கடமையைச் செய்தேன்’ என்று கூறியுள்ளார்.

96 ரன்களை எடுத்த ஷென்வாரியின் இந்த இன்னிங்ஸ் முதல் உலகக்கோப்பை வெற்றியைப் பதிவு செய்த ஆப்கன் கிரிக்கெட் வரலாற்றில் நீண்ட நாட்களுக்குப் பேசப்படும் என்பது உறுதி.

நியூசி.யில் உள்ள டியுனெடின் மைதானத்தில் நடந்த இந்த பரபரப்பான போட்டியில், 211 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்துக் களமிறங்கிய ஆப்கான் அணியில் தொடக்க வீரர் ஜாவேத் அகமதி 51 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து அவுட் ஆகும் போது ஆப்கானின் ஸ்கோர் 19-வது ஓவரில் 85/3 என்று இருந்தது. அதன் பிறகு 12 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் பறிபோனது.

ஸ்காட்லாந்து செய்த தவறு:

ஆட்ட நாயகனும், ஆப்கன் அணியில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற சமியுல்லா ஷென்வாரி 20 ரன்களில் இருந்த போது ஸ்காட்லாந்து வீரர் மஜித் ஹக் கேட்ச் வாய்ப்பை கோட்டைவிட்டார். ஆனால், அதே ஹக் ஓவரில்தான் கடைசியில் 3 சிக்சர்களை அடித்து 4-வது சிக்சர் முயற்சியில் ஆட்டமிழந்தார்.

ஷென்வாரியை அப்போது அவுட் செய்திருந்தால் ஆப்கன் அணி மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கும். ஆனால்.. இன்று அதிர்ஷ்டம் ஆப்கன் பக்கம் இருந்தது.

ஷென்வாரிக்கு பக்க பலமாக ஹமித் ஹசன் (15 நாட் அவுட்) நிற்க 9-வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதற்கு முன்னதாக தவ்லத் சத்ரான் என்ற பவுலருடன் ஷென்வாரி 8-வது விக்கெட்டுக்காக 35 ரன்கள் சேர்த்தார். தவ்லத் மிட் ஆஃபில் ஒரு ஷாட் ஆடி அவுட் ஆனவுடன் ஷென்வாரி நிலைகுலைந்து போனார்.

ஆனால்.. அதன் பிறகு இறங்கிய ஹமித் ஹசனுக்கு தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கியபடியே இருந்தார். அவரை நிற்கச் செய்தார். ஹமித் ஹசன் நிற்கத் தொடங்கியவுடன், அவரது ஆட்டத்தின் மீது நம்பிக்கை வந்தவுடன் 39-வது ஓவரில் ஷென்வாரி முதல் சிக்சரை அடித்தார். ஆனால் அதன் பிறகு ஹக் ஓவரில் 3 சிக்சர்களை அடிக்க சமன்பாடு மாறியது. ஆட்டம் இருதரப்பினருக்கும் இடையேயான கடும் போட்டியாக உருமாறியது.

7 விக்கெட்டுகள் பறிபோனவுடன் 31-வது ஓவரில் ஷென்வாரி முதன் முதலில் ஆக்ரோஷம் காட்டத் தொடங்கினார். வார்ட்லா பந்தை ஒரு சுழற்று சுழற்றி பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தை ஒரு காலை நகர்த்திக் கொண்டு லாங் ஆஃபில் ஒரு சாத்து சாத்தி அடுத்த பவுண்டரி விளாசினார். தவ்லத் ஆட்டமிழந்த பிறகு சில ஓவர்கள் சென்று ஷென்வாரி 113 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் அரைசதம் எடுத்தார்.

பிறகு 39-வது ஓவரில் மீண்டும் ஆக்ரோஷ முகம் காட்டிய ஷென்வாரி டேவி பந்தை, ஸ்லோ பந்தை, மிட்விக்கெட்டில் சிக்ஸ் அடித்து அடுத்த ஷாட் பிட்ச் பந்தை பாயிண்ட் பவுண்டரிக்கு விரட்டினார். 40வது ஓவர் முடிவில் 153/8 என்று இருந்தது ஆப்கன். பிறகு 43-வது ஓவரில் ஹக் பந்தை மிட்விக்கெட், மிட் ஆனுக்கு இடையில் சிக்ஸ் தூக்கினார். 46 ஓவர்கள் முடிவில் 173/8 என்று ஸ்கோர் இருந்த்து. 24 பந்துகளில் 38 ரன்கள் தேவை என்ற நிலையில்தான், ஸ்காட்லாந்து அணியின் கேப்டன் ஹக்கிடம் பந்தைக் கொடுத்து தவறு செய்தார்.

அந்த ஓவரில்தான் முதல் பந்து மிட்-ஆன், மிட்விக்கெட் இடையே முதல் சிக்ஸ், பிறகு ஒரு வைடு, பிறகு லெக் திசையில் வீசப்பட்ட பந்து மீண்டும் ஒரு சிக்ஸ், பிறகு அடுத்த பந்தும் லெந்தில் விழ ஸ்கொயர் லெக்கில் மேலும் ஒரு சிக்ஸ்... 96 ரன்களுக்கு வந்தார் ஷென்வாரி. ஆனால் அதே ஓவரில் மிட்விக்கெட்டில் சிக்கினார் ஷென்வாரி. ஹக் வீழ்த்திய பெருமையை வெளிப்படுத்த ஷென்வாரி முழங்காலிட்டு ஃபீல் செய்யத் தொடங்கினார். பெவிலியன் சென்ற பிறகு இருகைகளையும் தலையில் வைத்தபடியே இருந்தார். ஆனால் கடைசியில் பதட்டத்தை வென்றது ஆப்கான், ஸ்காட்லாந்து தோற்றது.

ஆப்கன் அணியின் அருமையான வேகப்பந்து வீச்சு:

முன்னதாக ஸ்காட்லாந்து பேட் செய்த போது, மெல்போர்ன் பிட்சின் தொடக்க உதவியினால் தவ்லத், ஹமீத் ஹசன் ஸ்விங்குக்கு ஸ்காட்லாந்து 11 ஓவர்களில் 40/3 என்று ஆனது. பிறகு மச்சன், கேப்டன் மோம்சன் இடையே 50 ரன்கள் ஜோடியாக சேர்க்கப்பட்டது.

ஆனால் அதன் பிறகு ஷபூர் சத்ரான் என்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர் உட்புக, 51 ரன்களுக்கு ஸ்காட்லாந்து 5 விக்கெட்டுகளை இழந்து 144/8 என்று ஆனது.

ஸ்காட்லாந்து பேட்ஸ்மென்கள் ஸ்டார்ட் செய்து பிறகு வீழ்ந்தனர். டாப் 6 பேட்ஸ்மென்கள் 20-31 ஸ்கோர்களில் ஆட்டமிழந்தனர். கடைசியில் ஹக் 31 ரன்களையும், இவான்ஸ் 28 ரன்களையும் சேர்க்க ஸ்காட்லாந்து 210 ரன்களை எட்டியது.

ஷபூர் சத்ரான் 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மொத்தத்தில் ஆப்கான் வரலாறு படைத்தது. ஷென்வாரியின் இன்னிங்ஸ், ஆப்கான் அணியின் பந்துவீச்சு சாதுரியமான கேப்டன்சி ஆகியவற்றால் ஆப்கான் சாதித்துள்ளது. ஆட்ட நாயகன் சமியுல்லா ஷென்வாரி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்