பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையை வென்றால் போதும், இந்தியாவிடம் தோற்றால் கூட கவலையில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் பேட்ஸ்மேன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ள கருத்து அந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியை பாகிஸ்தான் பலமுறை வெவ்வேறு போட்டி களில் வென்றுள்ளபோதிலும், உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது.
இந்த உலகக் கோப்பை போட்டி யில் அதனை மாற்றுவோம் என்று பாகிஸ்தான் வீரர்கள் பலரும் கூறி யுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள தீவிர ரசிகர்களும் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்த வேண்டும் என்று காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இன்சமாம் உல் ஹக்கின் கருத்து பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. முன்னதாக இன்சமாம் இது தொடர்பாக கூறியது:
1992-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டி யில் தோல்வியடைந்தோம். ஆனாலும் உலகக் கோப்பையை வென்றோம்.
ஆஸ்திரேலிய ஆடுகளங் களுக்கு ஏற்ப எப்படி விளையாடு வது என அறிந்துகொள்வது முக்கியம். இந்த வகையில் இந்திய பேட்ஸ்மேன்கள் இப்போது நல்ல அனுபவம் பெற்றுள்ளனர். இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டி மிக முக்கியமானது. எனினும் பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையை வெல்லும் பட்சத்தில் இந்தியாவுடன் தோற்றாலும் கவலையில்லை.
பயம் அறியாதவர் தோனி
தோனி கேப்டனாக இருப்பது இந்திய அணியின் மிகப்பெரிய பலம். இந்திய அணி நெருக்கடியில் இருந்த போதெல்லாம் தோனி ஒருவரே அணியை மீட்டுள்ளார். கடைசி கட்ட நெருக்கடிகளை திறமையாக கையாளும் கேப்டன் தோனி மட்டும்தான்.
அவர் பயமோ பதற்றமோ அடைவது இல்லை. விமர்சனங்களுக்கு அஞ்சாத மனஉறுதி மிக்கவர். தனது முடிவில் தெளிவாக இருக்கிறார் என்று இன்சமாம் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago