சிட்னியில் நடைபெற்ற உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி மே.இ.தீவுகள் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பசுந்தரை ஆட்டக்களத்தில் பந்துகள் எகிற, டாஸ் வென்ற மே.இ.தீவுகள் கேப்டன் ஹோல்டர் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்கள் கிறிஸ் வோக்ஸ் (5), ஸ்டீவ் ஃபின்(1) ஆகியோர் அபாரமாக பந்து வீச மே.இ.தீவுகள் 29.3 ஓவர்களில் 122 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து மொயீன் அலி (46) விக்கெட்டை மட்டும் இழந்து 22.5 ஓவர்களில் 125/1 என்று வெற்றி பெற்றது.
குறிப்பாக கிறிஸ் வோக்ஸ் பந்துகள் நன்றாக எழும்பியதோடு, கடுமையாக ஸ்விங் ஆனது. தொடக்க ஓவரின் 3-வது பந்தில் கிறிஸ் கெய்ல் லெக் திசையில் சென்ற பந்தை தேவையில்லாமல் ஆடப்போக பந்து கிளவ்வில் பட்டு ஜோஸ் பட்லரிடம் தஞ்சமடைந்தது.
அதற்கு அடுத்த பந்த் டேரன் பிராவோவுக்கு கிட்டத்தட்ட விளையாட முடியாத பந்து என்பது குறிப்பிடத்தக்கது. இடது கை வீரானா டேரன் பிராவோவுக்கு கிறிஸ் வோக்ஸின் அந்தப் பந்து குட் லெந்தில் பிட்ச் ஆகி எழும்பி, மட்டையின் விளிம்பைத் தட்டிச் சென்று பட்லர் கையில் தஞ்சம் அடைந்தது. முதல் ஓவரிலேயே வோக்ஸிற்கு ஹேட்ரிக் வாய்ப்பு. ஆனால் ஹேட்ரிக் எடுக்கவில்லை.
ஸ்மித் 3 பவுண்டரிகளை அடித்து 21 ரன்கள் எடுத்திருந்த போது வோக்ஸ் மீண்டும் எட்ச் செய்ய வைத்து பந்து பெல்லிடம் கேட்ச் ஆனது.
மர்லான் சாமுயெல்ஸ் 10 ரன்கள் எடுத்து ஸ்டீவ் ஃபின் பந்தில் பவுல்டு ஆனார். தினேஷ் ராம்தின் 6 ரன்கள் எடுத்து ஜோர்டானின் பந்தை தவறான லைனில் ஆட பவுல்டு ஆனார். மே.இ.தீவுகள் 14 ஓவர்கள் முடிவில் 52/5 என்று சரிவு கண்டது.
லெண்டில் சிம்மன்ஸ் மட்டுமே அதிகபட்சமாக 55 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 45 ரன்கள் எடுத்தார். பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய அந்த அணி 30 ஓவர்கள் கூட தாங்க முடியாமல் 122 ரன்களுக்குக் காலியானது.
கிறிஸ் வோக்ஸ் 7.3 ஓவர்களில் 1 மைடன் 19 ரன்கள் 5 விக்கெட்டுகள்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணிக்கு மே.இ.தீவுகள் பவுலர்களிடமிருந்து எந்த வித அச்சுறுத்தலும் இல்லை. வழக்கம் போல் மொயீன் அலி, பெல் ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுக்க 11.5 ஓவர்களில் 70 ரன்கள் எடுத்தது. மொயீன் அலி 43 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து ஒரே விக்கெட்டாக கிமார் ரோச்சிடம் வீழ்ந்தார்.
பெல் 35 ரன்களையும், டெய்லர் 25 ரன்களையும் எடுக்க 22.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது இங்கிலாந்து.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago