நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே வெல்லிங்டனில் நடைபெற்ற உலகக் கோப்பை ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
124 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய நியூஸிலாந்து அணிக்கு ப்ரெண்டன் மெக்கல்லம் அதிரடி துவக்கத்தைத் தந்தார். அடுத்தடுத்து பவுண்டரி, சிக்ஸர்கள் என அநாயசமாக வெளுத்து வாங்கிய மெக்கல்லம் 18 பந்துகளிலேயே அரை சதம் கடந்தார். மற்றொரு துவக்க வீரர் மார்டின் கப்டில் அதிரடி காட்டவில்லையென்றாலும் சீரான வேகத்தில் ரன் சேர்த்தார். ஃபின் வீசிய 6-வது ஓவரில் ஆடிய மெக்கல்லம் தொடர்ந்து நான்கு சிக்ஸர்களை விளாசினார்.
7 ஓவர்கள் முடிவில் 105 ரன்களைக் குவித்திருந்த நியூஸிலாந்து 8-வது ஓவரின் முதல் பந்தில் மெக்கல்லம்மை இழந்தது. அவர் 25 பந்துகளில் 77 ரன்களை எடுத்திருந்தார். இதில் 8 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் அடக்கம். வெற்றிக்கு 19 ரன்கள் தேவையாயிருக்க வில்லியம்சன் களமிறங்கினார். ஆனால் மெக்கல்லமை போன்று அதிரடி ஆட்டத்தை இவர் தொடரவில்லை.
9-வது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே வர வெற்றிக்கு 12 ரன்கள் தேவை என்ற நிலையில் 40 நிமிட உணவு இடைவேளை விடப்பட்டது. இதற்குப் பிறகு தொடர்ந்த ஆட்டத்தின் 3-வது பந்திலேயே வோக்ஸின் வேகத்தில் கப்டில் 22 ரன்களுக்கு வீழ்ந்தார். இதையடுத்து நிதானித்த நியூஸிலாந்து அணி 12.2 ஓவர்களில் வெற்றி இலக்கைக் கடந்தது. டெய்லர் 5 ரன்களுடனும், வில்லியம்சன் 9 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
முன்னதாக டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த இங்கிலாந்து ஆரம்பம் முதலே டெஸ்ட் போட்டியைப் போல தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டது. நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி தனது மூன்றாவது ஓவரில் இங்கிலாந்தின் முதல் விக்கெட்டை வீழ்த்தினார். தொடர்ந்து 3 பவுண்டரிகளை அடித்து மோயின் அலி சிறிது நம்பிக்கை அளித்தாலும் அவரால் நீண்ட நேரம் நிலைக்க முடியவில்லை. சவுத்தியின் அடுத்த ஓவரில் மோயின் அலி வீழ்ந்தார். தொடர்ந்து நியூஸிலாந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இங்கிலாந்து அணி தடுமாறியது.
குறிப்பாக டிம் சவுத்தியின் பந்துவீச்சு இங்கிலாந்து ஆட்டக்காரர்களை திணற வைத்தது. தனது ஸ்விங் மற்றும் வேகத்தால் தொடர்ந்து இங்கிலாந்து வீரர்களை பெவிலியனுக்கு அனுப்பினார். முடிவில் 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 123 ரன்களை மட்டுமே சேர்த்தது. நியூஸிலாந்தின் சவுத்தி 9 ஓவர்கள் வீசி, 33 ரன்களைத் தந்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உலகக் கோப்பை போட்டியில் நியூஸிலாந்து பந்துவீச்சாளரின் சிறந்த பந்துவீச்சு இது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணியின் தற்காப்பு ஆட்டமே அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது. தொடர்ந்து சுமாராக ஆடி வரும் கேரி பாலன்ஸுக்கு வாய்ப்பளித்திருக்காமல், அலெக்ஸ் ஹேல்ஸ் போன்ற அதிரடி வீரர் ஒருவர் அணியில் இருந்திருந்தால் இங்கிலாந்து அணி இன்னும் சிறப்பான ஸ்கோரை எட்டியிருக்கும். இதுவரை இந்த உலகக் கோப்பையில் 3 போட்டிகளை விளையாடியுள்ள நியூஸி. அணி மூன்றிலும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago