சிறந்த பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மென்கள் என்று பட்டியல் வெளியிடும் தற்போதைய புதிய மோஸ்தரின் படி மே.இ.தீவுகள் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கார்ட்னி வால்ஷ் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 11 சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இதில் தற்போது விளையாடிக்கொண்டிருக்கும் பவுலர்களை அவர் குறிப்பிடவில்லை. அனைவரும் ஓய்வுபெற்ற வீச்சாளர்களே.
இந்தப் பட்டியலை அவர் தரநிலைப்படுத்தி 1, 2 என்று குறிப்பிடவில்லை. மாறாக 11 வேகப்பந்து வீச்சாளர்களைப் பட்டியலிட்டு அவர்களைப் பற்றிய தனது மதிப்பீட்டையும் பதிவு செய்துள்ளார் கார்ட்னி வால்ஷ்.
கர்ட்லி ஆம்புரோஸ்:
ஜொயெல் கார்னருக்கு சிறந்த மாற்று வீரர் கிடைத்ததாகவே அப்போது மேற்கிந்திய தீவுகள் வட்டாரத்தில் கர்ட்லி ஆம்புரோஸ் பற்றி உணரப்பட்டது. ஆனால், இவரும் அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றவில்லை. கார்னர் போலவே அபாயகரமான யார்க்கர்களை வீசுவார் ஆம்புரோஸ். துல்லியமாக வீசுவார், ரன்கள் எடுப்பது மிகக்கடினம். அது போலவே பணம் செலவழிப்பதிலும் சிக்கனமாக இருப்பார். அவர் செலவழித்து நாம் மதுபானம் அருந்தி விடுவது அவ்வளவு சுலபமல்ல. 176 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 225 விக்கெட்டுகளை 24 என்ற சிக்கன சராசரியுடன் எடுத்துள்ளார். 6 முறை 4 விக்கெட்டுகளையும் 4 முறை 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். சிட்னியில் இவர் வீசிய ஒரு போட்டியை மறக்க முடியாது, அவரது மணிக்கட்டு பட்டையை அகற்றுமாறு ஆஸ்திரேலியபேட்ஸ்மென் டீன் ஜோன்ஸ் அறிவுறுத்த அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 5 விக்கெட்டுகளை 32 ரன்களுக்குக் கைப்பற்றினார்.
ஆலன் டோனல்ட்:
நல்ல வேகத்துடன் வீசுவார், புதிய பந்தில் உலக தொடக்க வீரர்களை அச்சுறுத்தியவர். 164 போட்டிகளில் 272 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 11 முறை 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
ஜொயெல் கார்னர்:
அந்த உயரத்திலிருந்து இவரளவுக்கு துல்லியமாக வீச முடிந்தால் பேட்ஸ்மென்களுக்கு கஷ்டகாலம்தான். 115 ஒருநாள் போட்டிகள்தான் ஆடியுள்ளார். 158 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சராசரி 21.56, சிக்கன விகிதம் ஓவருக்கு 3.30 ரன்களே.
மைக்கேல் ஹோல்டிங்:
102 ஒருநாள் போட்டிகளில் 142 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சராசரி 21.36, சிக்கன விகிதம் 3.32.
பிரெட் லீ:
உண்மையான வேகத்தில் வீசக்கூடியவர், 221 ஒருநாள் போட்டிகளில் 380 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சராசரி 24, 14 முறை 4 விக்கெட்டுகள். 9 முறை 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
மால்கம் மார்ஷல்:
என்னைப் பொறுத்தவரை மால்கம் மார்ஷல் ஒரு முழுநிறைவான பந்துவீச்சாளர். எங்களைப் போன்று அவர் உயரமுடையவர் அல்ல. ஆனால் நல்ல வேகத்துடன் இருபுறமும் அபாயகரமாக ஸ்விங் செய்பவர். 136 போட்டிகளில் 157 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சராசரி 27 ரன்களுக்கும் கீழ். சிக்கன விகிதம் 3.53.
கிளென் மெக்ரா:
இந்த வடிவத்தில் இவரைப்போன்று துல்லியமாக வீசும் பவுலர் என்னைப்பொறுத்த வரை இல்லை. 250 ஒருநாள் போட்டிகளில் 381 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 15 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை ஒரு போட்டியில் கைப்பற்றினார். சிக்கன விகிதம் ஓவருக்கு 4 ரன்களுக்கும் கீழ்.
ஆண்டி ராபர்ட்ஸ்:
2 உலகக்கோப்பை வெற்றிகளிலும் பங்கு பெற்றவர். 56 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். நிறைய ஆடியிருந்தால் இவர் இன்னும் சாதித்திருப்பார். சிந்திக்கும் வேகப்பந்து வீச்சாளர் இவர். 87 விக்கெட்டுகளை 20.35 என்ற சராசரியில் எடுத்துள்ளார். சிக்கன விகிதம் 3.40.
வாசிம் அக்ரம்:
கிரிக்கெட்டின் மிகப்பெரிய அபாயகரமான வீச்சாளர். இவர் மீது எனக்கு அளவுகடந்த மதிப்பு உண்டு. அவர் ஒரு ஜீனியஸ். எந்த ஒரு பிட்சிலும் வேகம் காட்டுவார். இருபுறங்களிலும் அபாயகரமாக ஸ்விங் செய்பவர். பயங்கரமான யார்க்கரையும் கைவசம் வைத்திருப்பவர். ரிவர்ஸ் ஸ்விங் மாஸ்டர். 356 ஒருநாள் போட்டிகளில் 502 விக்கெட்டுகள். இதனை 23.52 என்ற குறைந்த சராசரியில் செய்வது மிக மிக கடினம். சிக்கன விகிதம் அபாரமான 3.89
வக்கார் யூனிஸ்:
ரிவர்ஸ் ஸ்விங் கிங் என்றால் மிகையாகாது. வாசிமும் இவரும் பேட்ஸ்மென்களுக்கு மிகவும் கஷ்ட காலங்களை உருவாக்கியுள்ளனர். 262 போட்டிகளில் 416 விக்கெட்டுகள். 14 முறை 4 விக்கெட்டுகளையும் 13 முறை 5 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். இவரும் வாசிம் அக்ரமும் இணைந்து 900த்த்துக்கும் மேல் ஒருநாள் போட்டிகளில் விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்கள். நானும், கர்ட்லி ஆம்புரோஸும் போல் வக்கார், வாசிம் என்று ஒப்பிடலாம்.
ரிச்சர்ட் ஹாட்லி:
இவர் 115 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். 158 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஆனால் சராசரி 21.56 மற்றும் சிக்கன விகிதம் 3.30
இதுதான் கார்ட்னி வால்ஷின் தலைசிறந்த 11 ஒருநாள் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர்கள்.
கபில்தேவ் 225 ஒருநாள் போட்டிகளில் 253 விக்கெட்டுகளை 27.45 என்ற சராசரியின் கீழ் 3.71 என்ற அபாரமான சிக்கன விகிதத்தில் எடுத்துள்ளார். ஆனால் கபில்தேவை கார்ட்னி வால்ஷ் ஏனோ குறிப்பிடவில்லை. மேலும் இவர் குறிப்பிட்ட வேகப்பந்து வீச்சாளர்களில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் தவிர மற்றெல்லோரும் வேகப்பந்து வீச்சுக்கு ஓரளவுக்கு சாதகமான ஆட்டக்களத்திலெயே அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.
ஆனால் கபில்தேவ் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமற்ற துணைக்கண்டத்தில்தான் அதிக போட்டிகளில் விளையாடியுள்ளார். எனவே கபில்தேவ் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago