டிவில்லியர்ஸ் 162* விளாசி சாதனை: தெ.ஆ. 408 ரன்கள் குவிப்பு

By செய்திப்பிரிவு

டிவில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 162 ரன்கள் விளாசி புதிய சாதனைகள் படைத்ததுடன், உலகக் கோப்பையில் தனது தென் ஆப்பிரிக்க அணியின் அதிகபட்ச ஸ்கோர் என்ற வரலாற்றுப் பதிவுக்கும் வித்திட்டார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்கா தனது இன்னிங்ஸ்சில் 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 408 ரன்கள் குவித்தது. இதன் மூலம், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 409 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதன் பின், தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள், இம்ரான் தாஹிர் (5விக்.) பந்துவீச்சில் 33.1 ஓவர்களில் 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், தென் ஆப்பிரிக்கா 257 ரன்கள் வித்தியாசத்தில் உலகக்கோப்பை வரலாற்றில் 2-வது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. | விரிவாக படிக்க ->டிவில்லியர்ஸ் 162 நாட் அவுட்; மே.இ.தீவுகள் 151 ஆல் அவுட்! |

இபோட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் துவக்க ஆட்டக்காரர் டிகாக் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின், ஆம்லாவுடன் டூபிளெஸ்ஸி ஜோடி சேர்ந்ததும் ரன் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. ஆம்லா 65 ரன்களும், டூபிளெஸ்ஸி 62 ரன்களும் சேர்த்தனர்.

பின்னர் களமிறங்கிய ரூசோ - டிவில்லியர்ஸ் இணை மிகச் சிறப்பாக விளையாடியது. ரூசோ 61 ரன்களில் ஆட்டமிழக்க, டிவில்லியர்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 66 பந்துகளில் 162 ரன்கள் விளாசினார்.

மில்லர் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். பெஹார்தீன் ஆட்டமிழக்காமல் 10 ரன்கள் சேர்த்தார். கடைசியில், தென் ஆப்பிரிக்கா தனது இன்னிங்ஸ்சில், 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 408 ரன்கள் குவித்தது.

மேற்கிந்திய தீவுகள் தரப்பில், ரசல், கெயில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஹோல்டர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

டிவில்லியர்ஸ் சாதனைத் துளிகள்:

இப்போட்டியில் 52 பந்துகளில் சதத்தை எட்டியதன் மூலம், உலகக் கோப்பையில் இரண்டாவது அதிவேக சதம் அடித்தவர் என்ற சாதனையை டிவில்லியர்ஸ் வசப்படுத்தினார். 50 பந்துகளில் சதத்தை எட்டிய கெவின் ஓ பிரையனிடம் முதல் அதிவேக சதம் என்ற சாதனை உள்ளது.

அதேவேளையில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக ஒன்றரை சதம் (150 ரன்கள்) என்ற சாதனையை டிவில்லியர்ஸ் படைத்துள்ளார்.

டிவில்லியர்ஸ்சின் விளாசல் துணையுடன், தென் ஆப்பிரிக்க அணி உலகக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர் என்ற புதிய சரித்திரத்தை இன்று தொட்டுள்ளது.

குறிப்பாக, உலகக் கோப்பையில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை எட்டிய அணி என்ற பெருமையையும், ஆஸ்திரேலிய மண்ணில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த அணி என்ற பெருமையையும் பெற்றது.

2007-ல் பெர்முடா அணிக்கு எதிராக இந்திய அணி 413 குவித்ததே இதுவரை உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஓர் அணியின் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்